ராகு கேது பெயர்ச்சியால் எந்த ராசிக்கு பொற்காலம்? இதுல உங்க ராசி இருக்குதானு பாருங்க
ராகு கேது பெயர்ச்சியைத் தொடர்ந்து திடீர் கோடீஸ்வர யோகத்தை அடையும் ராசிகள் யார் என்பதை தெரிந்து கொள்வோம்.
ராகு கேது
பெரும்பாலான கோவில்களில் தற்போது ராகு கேது பெயர்ச்சி பரிகார யாகங்கள் நடைபெற்று வருகின்றது.
திருக்கணித பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி அக்டோபர் 30ஆம் தேதி நிகழ உள்ளது. மேஷ ராசியிலிருந்து ராகு மீன ராசிக்கும் துலாம் ராசியிலிருந்து கேது கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியைப் பொறுத்த வரையில் ராகு 8ம் வீட்டிலும் கேது 2ம் வீட்டிலும் பெயர்ச்சி அடையும் நிலையில், ஜாகத்தில் 8ம் இடம் என்பது கெட்ட ஸ்தானமாகும்.
ஆனால் ராகு பகவான் பெருமையையும் புகழையும் தருவதுடன், எதிர்பாராத பணம், பொன் பொருள் சேர்க்கை, வீடு வாசல் போன்ற வசதியும் கிடைக்கும்.
கேது 2ஆம் வீட்டிற்கு வருவதால் சொல்லும் செயலும் வெற்றி பெறும். உங்களுடைய முயற்சி வெற்றியை தரும்.
கன்னி
கன்னி ராசியில் இதுவரை 2ம் இடத்திலிருந்த கேதுவும், 8ம் இடத்தில் ராகுவும் இருந்த நிலையில் தற்போது 7ம் இடத்திற்கு மாறியுள்ளனர். அடுத்த ஆண்டு மே மாதம் குரு ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அப்போது கன்னி ராசியின் மீது குருவின் பார்வை விழுவதால், கோடீஸ்வர யோகம் வருவதுடன், கஷ்டங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கின்றது.
துலாம்
ராகு 6ம் பாவத்திற்கும் கேது 12ஆம் பாவத்திற்கும் இடப்பெயர்ச்சி அடையும் நிலையில், கடன் அடைவதுடன், தீராத நோயும் தீருமாம்.
மோட்ச ஸ்தானத்தில் மோட்சகாரகன் வருவதால் புது முயற்சிகள் கை கூடும். ராகு கேது பெயர்ச்சி யோகம் செல்வாக்கு சொத்து சுகத்தையும், பண வருமானத்தோடு அறிவையும் ஞானத்தையும் தரப்போகிறது.
விருச்சிகம்
ராகு உங்களது ராசியில் 5ம் வீட்டிலும், கேது 11ம் இடத்திலும் இருக்கின்றனர். 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த ஸ்தானங்களில் ராகு கேது சஞ்சரிக்கும் நிலையில், தேவையற்ற செலவுகள் குறைவதுடன், தடைபட்ட காரியங்களும் வெற்றிகரமாக முடிகின்றது.
அசையா சொத்துகள் வீடு மனை வாங்கும் யோகத்தை கொடுக்கும். ராகு கேது பெயர்ச்சியால் தோஷங்கள் நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |