ராகு கேது பெயர்ச்சி... 2027-ல் கஷ்டம் நீங்கி மகிழ்ச்சியாக இருக்கும் ராசிகள்
Rahu Kethu Peyarchi: ராகு, கேது பெயர்ச்சியினால் எதிர்பாராத அதிர்ஷ்டத்தினை பெறும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ராகு, கேது பெயர்ச்சி
ஜோதிடத்தில் நிழல் கிரகங்களாக கருதப்படும் ராகு கேது கிரகங்களுக்கு தனக்கென சொந்த ராசி கிடையாது. சனி பகவானுக்கு அடுத்தபடியாக நீண்ட காலமாக பயணிக்கும் கிரகமாக இருக்கின்றது.
இந்த இரு கிரகங்களும் 18 மாதங்கள் வரை ஒரு ராசியில் இருக்கும். இவை இரண்டும் கொடிய கிரகங்களாக கருதப்பட்டாலும், ஒருவரை உச்சத்திற்கு கொண்டு செல்லவும் செய்யும்.
அந்த வகையில் ராகு மற்றும் கேது, கும்பம் மற்றும் சிம்ம ராசியில் பயணித்து வரும் நிலையில் டிசம்பர் 5ம் தேதி ராகு மற்றும் கேது தனது ராசியினை மாற்றுகின்றார். இதில் ராகு மகர ராசிக்கும், கேது கடக ராசிக்கும் செல்ல உள்ளார்.
ராகு மற்றும் கேது 2028ம் ஆண்டு ஜுலை மாதம் வரை இருக்கும் நிலையில், சில ராசியினர் செழிப்பாக வாழும் அதிர்ஷ்டம் கிடைக்கும் அந்த வகையில் எந்தெந்த ராசியினர் அதிர்ஷ்டம் பெறுகின்றனர் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம்
மேஷ ராசியினருக்கு தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சி கிடைப்பதுடன், பணி செய்பவர்கள் தங்களது திறமையினை செயல்படுத்த நல்ல வாய்ப்பாகும்.
உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். வணிக ரீதியாக அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சரியான வாய்ப்பும் தேடி வருமாம்.

ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு ராகு கேது பெயர்ச்சியினால் தொழில் மற்றும் நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் கிடைப்பதுடன், பதவி உயர்வு, புதிய பொறுப்பும் பணி செய்பவர்களுக்கு கிடைக்கும்.
வணிகத்தில் உள்ளவர்களுக்கு புதிய யோசனையால் அதிக லாபம் கிடைப்பதுடன், வருமானமும் அதிகரிக்கும். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் நல்ல வெற்றி கிடைக்கும். குறிப்பாக தடைபட்டுள்ள வேலைகள் அனைத்தும் வெற்றியாக முடியும்.

மிதுனம்
மிதுன ராசியினருக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியினால் நல்ல வேலை கிடைப்பதுடன், மாணவர்களுக்கு படிப்பில் சிறப்பாக செயல்படுவதற்கு நல்ல காலமாக இருக்கின்றது.
வெளிநாட்டில் படிக்க அல்லது வேலை செய்ய நினைப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிப்பதுடன், பணியிடத்தில் அனுபவம் மற்றும் சிறந்த வழிகாட்டல் கிடைக்கும்.

சிம்மம்
ராகு கேது பெயர்ச்சியால் சிம்ம ராசியினரின் நிதி நிலை சிறப்பாக இருப்பதுடன், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரம் உருவாகும் வாய்ப்புள்ளது.
குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் கிடைப்பதுடன், பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்பும் கிடைக்கும். வணிகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நட்பால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.

மகரம்
மகர ராசியினருக்கு ராகு கேது பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. தனிப்பட்ட வாழ்க்கையில் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்துமாம்.
புதிய விடயங்களை கற்றுக்கொண்டு, வாழ்க்கையில் வளர்ச்சி பெற நினைப்பீர்கள். புதிய நட்பினால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.

மீனம்
மீன ராசியினருக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. தொழிலில் முன்னேற்றத்திற்கு வாய்ப்பு கிடைப்பதுடன், நீண்ட காலமாக முடியாமல் இருந்த பணிகள் முடிவடையும்.
நண்பர்களின் உதவி கிடைப்பதுடன், முதலீடுகளில் சிந்தித்து முடிவெடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்குமாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |