ஏ.ஆர். ரஹ்மான் முதன்முதலில் இசையமைத்த பாட்டு: அவருடைய அம்மா செய்த நெகிழ்ச்சி செயல்
இந்தியா மட்டுமின்றி உலகமே திரும்பி பார்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.
மணிரத்னத்தின் ரோஜா படம் மூலம் அறிமுகமாகி இன்று வரை இசை உலகில் தனக்கென நீங்கா இடத்தை பிடித்திருக்கிறார். ஸ்லம் டாக் மில்லியனியர் படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றவர், இவர் எப்போதுமே தனது அம்மாவைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பார், முதன்முதலில் ரோஜா படத்துக்காக “சின்ன சின்ன ஆசை” பாடலை இசையமைத்ததும் அம்மாவிடம் போட்டுக் காட்டினாராம்.
பாடலை கேட்டதும் தன்னை கட்டியணைத்து பாராட்டுவார் என எதிர்பார்த்த நிலையில், அவரோ கதறி அழ ஆரம்பித்து விட்டாராம். இதனால் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் சற்றே குழம்பி போக, இந்தப் பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
எனக்கு மட்டும் இல்ல, கேட்கிற எல்லோருக்கும் நிச்சயம் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார். அப்பறம்தான் ரகுமானுக்கு நிம்மதியே வந்ததாம்.