உடம்பில் கெட்ட கொலஸ்ட்ரால் அனைத்தும் வெளியேற வேண்டுமா? இதை மட்டும் சாப்பிடுங்க
ராகு உடம்பிற்கு அதிக சத்துக்களை கொடுக்கின்றது. சாதாரண உணவுகளைக் காட்டிலும் அதிக சத்துக்கள் கொண்ட இவற்றினை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க முடியும்.
அதிலும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி, குழந்தை பெற்ற பின்பு ஏற்படும் முதுகுவலி இவற்றினை கட்டுப்படுத்துகின்றது. மேலும் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு உயராமல் தடுப்பதுடன், அதிக எடையை குறைத்து கெட்ட கொழுப்பை கரைக்கின்றது. தற்போது ராகி களி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
ராகி பவுடர் - 200 கிராம்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
பாத்திரம் ஒன்றில் ராகி பவுடரை எடுத்துக் கொண்டு, எந்த அளவில் மாவை எடுத்துள்ளீர்களோ, அதே அளவில் தண்ணீர் மற்றும் சிறிதளவு உப்பு இவற்றினை சேர்த்து நன்கு கட்டிப்படாமல் கலந்து கொள்ளவும்.
பின்பு சட்டி ஒன்றில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சற்று கொதிநிலைக்கு வரும் தருணத்தில், கரைத்து வைத்திருக்கும் ராகி மாவை ஊற்றி நன்கு கட்டிப்படாமல், அடிபிடிக்காமல் கலந்து கொள்ளவும்.
இரண்டு நிமிடம் வரை இவ்வாறு நன்கு மாலை கிளறிவிட்டால் நன்கு களி பதத்திற்கு கட்டியாக வந்துவிடும். பின்பு சிறிய உருண்டையாக உருட்டி பறிமாறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |