விஜய் ராஜினாமாவால் காலியான தொகுதி...அரசியலில் நுழைய தேதி, நேரத்தை அறிவித்த ராகவா லாரன்ஸ்!
தமிழக அரசியல் களம் தற்போது திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை எதிர்நோக்கி உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய நடிகர் விஜய், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின்னர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அவர், விதிமுறைகளின்படி திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், அந்தத் தொகுதியில் தவெக சார்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளார் என்ற தகவல் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வைரலாகி வருகின்றது.
தேதியை வெளியிட்ட லாரன்ஸ்
இதுகுறித்து ராகவா லாரன்ஸ் தனது விளக்கத்தை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தச் செய்தி அதிகமாக பரவி வருவதால், அதுகுறித்து நான் விளக்கம் அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

தற்போது நான் Benz திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளேன். வரும் 10ஆம் தேதி படப்பிடிப்பு நிறைவடைகிறது.
என் அம்மாவின் ஆசியுடன், என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒரு முடிவை வரும் 11ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு அறிவிக்க உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
Hi everyone, News about me contesting in Trichy East election has been circulating across various media platforms.
— Raghava Lawrence (@offl_Lawrence) June 7, 2026
All my Media friends have been reaching out to me over phone and requesting to meet me asking for clarification. Since the speculation has grown to a point where I… pic.twitter.com/68ZyN6P0l9
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |