1000 பாம்புகள் மத்தியில் கதறிய ராதிகா... பிரபல நடிகர் முதுகில் ஏறி தப்பிய சோகம்
சமீப காலங்களில் ஒடிடி தளங்களில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வரும் நிலையில், ஒடிடி தளங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
சிறிய பட்ஜெட் படங்கள் வெளியிடுவதற்கு இந்த தளங்கள் மிகவும் உதவியாக இருந்து வருகின்றது. அந்த வகையில் தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களின் ஒருவரான அல்லு அரவிந்த் ஆஹா என்ற பெயரில் ஒடிடி தளத்தை தொடங்கியுள்ளார்.
முதலில் தெலுங்கில் தொடங்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த தளம் தற்போது தமிழில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பிரம்மாண்டாக நடைபெற்ற இந்த ஒடிடி தளத்தில் அறிமுக விழாவில் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் நடிகை ராதிகா தனது கணவர் சரத்குமாருடன் கலந்துகொண்டார். அப்போது பேசிய நடிகை ராதிகா பல்வேறு சுவாரஸ்யமாக நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டார்.
தமிழர்களுக்காகவும், தமிழ் சினிமாவிற்காகவும் நீங்கள் பெரிய முயற்சி எடுத்துள்ளீர்கள் அந்த முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள். ஆஹா பல மொழிகளில் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்று கூறினார் அப்போது அல்லு அரவிந்த் தயாரிப்பில் நடித்தபோது நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள் குறித்து கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த ராதிகா, அல்லு அரவிந்த் சாருடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது. பல படங்கள் எடுத்துள்ள அவர், தன்னையும், சிரஞ்சீவி சாரையும் வைத்து எடுத்த ஒரு படத்தில்,நான் பாம்புடன் நடிக்க வேண்டும்.
ஆனால் பாம்புஎன்றால் எனக்கு பயம் என்பதால் அக்காட்சியில் நடிக்க மறுத்துவிட்டனர், ஆனால் அல்லு அரவிந்த் சார் அதெல்லாம் ஒன்றும் இல்லை நீ வந்து நடி என்று கூறியதால் நானும் சென்ற போது சுமார் 1000 பாம்புகளை திறந்துவிட்டார்.
இதனால் அவரை கோபமாகி கண்டபடி திட்டியதோடு, தகாத வார்த்தையிலும் பேசி கோபத்தின் உச்சத்திற்கு சென்றேன். ஆனால் அவர் ஒரு நிமிடம் வாயை மூடி நில் ஷாட் ஓகே ஆகிவிடும் என்று சொன்னார்.
அப்போதும் நான் சமாதானம் ஆகவில்லை என்பதால், சிரஞ்சீவி சாரை அனுப்பி சமாதானம் செய்யக் கோரிய போது, அவர் அருகில் வந்ததும் அவரது முதுகில் ஏறிக்கொண்டு என்னை எப்படியாவது வெளியில் கூட்டிக்கொண்டு செல்லுங்கள் என்று கத்த ஆரம்பித்தேன். இந்த சம்பவத்தை என்னால் மறக்க முடியாது என்று கூறியுள்ளார்.