தயவு செய்து 1 மணி நேரம் ஒதுக்குங்கள்! பெண்களுக்காக ராதிகா சரத்குமாரின் வேண்டுகோள்
நடிகை ராதிகா சரத்குமார் குடும்ப பெண்களுக்காக ஒரு சிறிய வேண்டகோளை விடுத்துள்ள செய்தி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ராதிகா சரத்குமார்
நடிகை ராதிகா சினிமா திரைப்படங்களில் மட்டும் தனது திறமையை காட்டவில்லை.டிவி சீரியல் அரசியல் போன்ற பல்வேறு துறைகளில் தனது திறமையை காட்டி வருகிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.இதனை தொடர்ந்து சரத்குமார் வரலட்சுமி திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவலாக காணப்பட்டது.
இதை பார்த்த இணையவாசிகள் இந்த வயதிலும் இப்படி இளமையாக இருக்கின்றாரே என கருத்து வெளியிட்டு வந்தனர்.இதற்கு காரணம் அரசியல், குடும்ப நிகழ்வுகள் என்று பிஸியாக இருந்தாலும், நடிகை ராதிகா சரத்குமார், ஃபிட்னஸில் கவனம் செலுத்தத் தவறியதே இல்லை.
வொர்க் அவுட் செய்து ஃபிட்டாக இருப்பதில் கவனமாக இருப்பார். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக அவ்வப்போது வொர்க் அவுட் புகைப்படங்களையும் வெளியிட்டு மற்றவர்களையும் ஊக்கப்படுத்துவார்.
இந்த நிலையில் குடும்பத்தை மட்டுமே யோசித்து வாழும் பெண்களுக்காக ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார்.அவர் கூறியதன்படி இது குறித்து நடிகை ராதிகா சரத்குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படத்தைப் பதிவிட்டு கூறியிருப்பதாவது
“ஆரோக்கியமே செல்வம் பெரும்பாலான பெண்கள் குடும்பத்தை ஆரோக்கியத்திற்கு மேல் வைத்துள்ளனர், தயவுசெய்து அந்த 1 மணி நேரத்தை உங்களுக்கே கொடுங்கள், குடும்பம் எப்போதும் அங்கே இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.இது பெண்களுக்கு ஒர கருத்தாக ண்டுகோள் விடுத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |