மரணத்தையடுத்து இப்படி ஒரு பதிவு ஏன்? ராதிகா மகள் ரேயானின் ரீசன்ட் போஸ்ட் வைரல்
நடிகர் எம்ஆர் ராதாவின் மனைவியும், நடிகை ராதிகாவின் அம்மாவுமாகிய கீதா ராதா நேற்று முன்தினம் வயது மூப்பு காரணமாக காலமானார்.
இவரின் இறுதி சடங்குகள் முடிந்துள்ள நிலையில், ராதிகாவின் மகள் ரேயான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
ராதிகாவின் தாய் மரணம்
பிரபல நடிகை ராதிகா மற்றும் நிரோஷா ஆகியோரின் தாயாரும், மறைந்த நடிகர் எம்.ஆர். ராதாவின் மனைவியுமான கீதா ராதா, நேற்று வயது மூப்பின் காரணமாகக் காலமானார். அவரது மறைவு, திரையுலகினர் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது மாமியாரின் உடலை சரத்குமார் சுமந்து வந்து இறுதி ஊர்வல வாகனத்தில் ஏற்றிய காட்சிகள் இணையத்தில் வைரலானதுடன், ரசிகர்கள் மத்தியில், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தாயை பார்த்து ராதிகாவும் நிரோஷாவும் அழுதது பார்ப்போரை கலங்கடித்தது.
ராதிகா மகளின் ரீசன்ட் போஸ்ட்
இந்நிலையில் தனது பாட்டியின் மரணத்துக்கு பின்னர் ராதிகாவின் மகள் ரேயான் இன்ஸ்டாவில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், "திருமணம், கொண்டாட்டம் போன்ற விஷயங்களில் கலந்துகொள்ளவில்லை என்றாலும், நிச்சயம் இறுதி அஞ்சலியில் கலந்துகொள்ள வேண்டும் என எனது அப்பா சொல்லியிருக்கின்றார்.
பழைய பகை எதுவாக இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்துவிட்டு போய் மரியாதை செலுத்த வேண்டும் என அவர் சொல்வார்" என குறிப்பிட்டுள்ளார்.
ரேயான் திடீரென ஏன் இப்படியொரு பதிவை போட்டுள்ளார். யாருக்காக இப்படி பதிவிட்டு இருக்கிறார்? என நெட்டிசன்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைராலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
