அம்பானி வீட்டு வருங்கால மருமகளிற்கு போடப்பட்ட நிச்சயதார்த்த மோதிரத்தின் விலை இவ்வளவு தானா?
ஆனந்த அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்
மும்பையில் உள்ள தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டில், நேற்று அவரது மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட்க்கும் பிரம்மாண்டமான முறையில் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.
ஆனந்த அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகிய இருவரும் சில வருடங்களாக நண்பர்களாக இருந்து வந்த நிலையில், இவர்கள் இருவரும் நிச்சயம் செய்துக் கொண்டுள்ளனர்.
ராதிகா மெர்ச்சன்ட் ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ஆவார். ஆனந்த் மற்றும் ராதிகா சில வருடங்களாக ஒருவரையொருவர் நன்கு அறிந்தவர்கள்.
இந்நிலையில் அவர்களின் நிச்சயதார்த்ததிற்கு மாற்றிக் கொண்ட மோதிரத்தின் விலை தற்போது அதிகம் பேசப்படும் விடயமாக மாறியிருக்கிறது.
மோதிரத்தின் விலை
அண்மையில் ராதிகா வெள்ளை நிற உடையில் அழகான ஒரு புகைப்படத்தை எடுத்து வெளியிட்டிருந்தார்.
அதில் அவர்களின் நிச்சயதார்த்த மோதிரம் பளிச்சென்று தெரிந்தது இதனால் இந்த மோதிரத்தின் விலை எவ்வளவு என்று தேடிப்பார்த்தால் அதன் மதிப்பு ரூ.56,585 மேல் இருக்குமாம். மேலும் அது வைர மோதிரமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |