விதி நம்மை இணைத்ததாக உணர்கிறேன்... ரச்சிதா மகாலட்சுமியின் புதிய பதிவு வைரல்!
சில இணைப்புகள் வெறும் மாயாஜாலமே.. விதி நம்மை இணைத்ததாக உணர்கிறேன்..எனக்கு ஒரு தோள் இருக்கிறது. அனைத்து அன்புக்கும் நன்றி விச்சு மா என குறிப்பிட்டு நடிகை ரச்சிதா மகாலட்சுமி தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ரச்சிதா மகாலட்சுமி
நடிகை ரச்சிதா மகாலட்சுமி சீரியலில் இருந்து சினிமாவுக்கு சென்ற நடிகைகளில் ஒருவராக உள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.
சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த, தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கடந்த சில வருடங்களாக இவர்கள் இருவரும் கருத்து வேறுப்பாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
புதிய வீடு வாங்கி அம்மாவுடன் குடியேறிய இவர், அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 6இல் கலந்து கொண்டார்.
தற்போது படங்களில் நடித்து வரும் ரச்சிதா, சினிமாவில் அறிமுகமாகிய பின்னர் தாராள கவர்ச்சி காட்டி சமூக ஊடகங்களிலும் புகைப்படங்களையும் காணொளிகளையும் வெளியிட்டு வருகின்றார்.
அண்மை காலமாகவே தனிமையில் சுற்றுலா, தனிமையில் உணவு என தனிமையில் இருக்கும் காணொளிகளையே அதிகமாக பகிர்ந்த இவர், தற்பேது நடிகை விசித்ராவை கட்டியணைத்தபடி வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |