ரச்சிதா மகாலட்சுமிக்கு என்ன ஆச்சி? நடுகாட்டில் தனிமை... வைரலாகும் காணொளி!
நடிகை ரச்சிதா மகாலட்சுமி அண்மை காலமாக தனிமையில் இருக்கும் காணொளிகளை அதிகமாக பகிர்ந்து வருகின்றார்.
காட்டுக்கு நடுவிலிருந்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் பெரும்பாலானலர்களின் கவனத்தையும் ஈர்த்து வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ரச்சிதா மகாலட்சுமி
நடிகை ரச்சிதா மகாலட்சுமி சீரியலில் இருந்து சினிமாவுக்கு சென்ற நடிகைகளில் ஒருவராக உள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.
சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த, தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கடந்த சில வருடங்களாக இவர்கள் இருவரும் கருத்து வேறுப்பாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
புதிய வீடு வாங்கி அம்மாவுடன் குடியேறிய இவர், அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 6இல் கலந்து கொண்டார்.
தற்போது படங்களில் நடித்து வரும் ரச்சிதா, சினிமாவில் அறிமுகமாகிய பின்னர் அண்மை காலமாக தாராள கவர்ச்சி காட்டி சமூக ஊடகங்களிலும் புகைப்படங்களையும் காணொளிகளையும் வெளியிட்டு வருகின்றார்.
இந்நிலையில் அண்மை காலமாகவே தனிமையில் சுற்றுலா, தனிமையில் உணவு என தனிமையில் இருக்கும் காணொளிகளையே அதிகமாக பகிர்ந்து வருகின்றார். தற்போது சற்று வித்தியாசமான முறையில் காட்டுக்கு நடுவில் தனிமையில் இயற்கையை ரசிக்கும் அழகிய காணொளியை பகிர்ந்துள்ளார்.
அதனை பார்த்த ரசிகர்கள் இவர் ஏதேனும் சோகத்தில் இருக்கின்றாரா? என கேள்வியெழுப்பி வருகின்றனர். குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
