அசத்தல் அழகில் ரசிகர்களை ஈர்க்கும் ரச்சிதா மகாலட்சுமி... படு வைரலாகும் வீடியோ!
நடிகை ரச்சிதா மகாலட்சுமி ட்ரெண்டிங்கான சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் அசத்தல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
ரச்சிதா மகாலட்சுமி
சின்னத்திரையில் தனது இயல்பான நடிப்பாலும், அழகான புன்னகையாலும் ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்தவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் தொடரான 'சரவணன் மீனாட்சி' மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமான அவர், அந்த ஒரே தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.
தற்போது சின்னத்திரையைத் தாண்டி வெள்ளித்திரையிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார். 'சரவணன் மீனாட்சி' தொடரில் தனது ஜோடியாக நடித்த நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரச்சிதா, ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்ட நட்சத்திர ஜோடிகளில் ஒருவராக இருந்தார்.

எனினும், கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்பிறகு, ரச்சிதா தனியாக புதிய வீடு வாங்கி தனது தாயாருடன் குடியேறினார்.
மேலும், விஜய் தொலைக்காட்சியின் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான 'பிக் பாஸ் தமிழ்' சீசன் 6-ல் போட்டியாளராக கலந்து கொண்டு, தனது நேர்மையான அணுகுமுறையாலும் அமைதியான குணத்தாலும் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தற்போது திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் ரச்சிதா, சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் அழகிய சேலையில் கவர்ச்சிகரமான மற்றும் ஸ்டைலிஷ் போஸ்களுடன் அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |