ரக்ஷிதா மீது காதல்? வெளியே வந்ததும் புட்டு புட்டு வைத்த ராபர்ட் மாஸ்டர்
பிக்பாஸ் வீட்டை விட்டு கடந்த வாரம் வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் ரக்ஷிதா பற்றி பேசியது வைரலாகி வருகிறது.
தமிழில் பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இதில் ஜிபி முத்து, நடிகர் அசிம், திருநங்கை ஷிவின் கணேசன், தொகுப்பாளினி ஜனனி, அமுதவாணன் உட்பட மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் தாமாக முன்வந்து ஜிபி முத்து வெளியேறினார், தொடர்ந்து சாந்தி மாஸ்டர், அசல் கோளாறு, ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் வெளியேறியுள்ளனர்.
ரக்ஷிதாவை சுற்றி சுற்றி வந்த ராபர்ட்
இந்நிகழ்ச்சியில் தொடக்கம் முதலே ரக்ஷிதா மீது அதிக பாசத்தை பொழிந்தார் ராபர்ட் மாஸ்டர்.
அடிக்கடி அவரை பார்ப்பது, அவரது செயல்களை ரசிப்பது என பலபல சேட்டைகளை பண்ணினார்.
இதுகுறித்து பேசுகையில், ரக்ஷிதா மீது எனக்கு க்ரஷ் உள்ளது என்பதை வெளிப்படையாக ஒத்துக்கொள்கிறேன். அவரும் என் மீது பாசமாக தான் இருப்பார், அதையும் நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.
எனக்கு வெளியே காதலி இருப்பது அவருக்கு தெரியும், அவர் மனதில் என்ன இருக்கிறது என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும்.
ரக்ஷிதா வெளியே வந்த பிறகு தான் உண்மை என்ன என்பது தெரியவரும் என தெரிவித்துள்ளார்.
வனிதா பற்றி பேசிய ராபர்ட்
வனிதா பற்றி பேசுகையில், என் வயசுக்கு இது தேவையா? என அவர் கேட்பதில் நியாயமில்லை, அவரை பார்த்து உலகமே சிரித்தது.
பிக்பாஸ் செல்லும் முன் அவரிடம் அறிவுரைகள் கேட்டுக்கொண்டேன், அவ்வளவு தான். நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் செல்ல அவர் காரணமில்லை.
பிக்பாஸ் வீட்டுக்கு அசிம், தனலட்சுமியுடன் அதிகம் பழகாததற்கு காரணம் அவர்களது கோபம் தான். எனக்கும் அதிக கோபம் வரும் என்பதால் விலகியிருந்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.