Viral Video: படுக்கையில் மரண அவஸ்தை படும் பெண்! நாய் கடியை அசால்டாக விடாதீங்க
பெண் ஒருவர் தெருநாய் கடித்ததால் ரேபிஸ் பாதிப்பிற்குள்ளாகி மரண சித்ரவதை அனுபவிக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ரேபிஸ்
ரேபிஸ் என்பது பாதிக்கப்பட்ட விலங்குகளின் உமிழ்நீர் மூலம் பரவும் ஒரு கொடிய வைரஸ் நோய். ரேபிஸ் வைரஸ் பெரும்பாலும் நாய், பூனை கடித்தால் பரவுகிறது.
குறிப்பாக வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேபிஸ் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஆரம்பத்தில் எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் இருக்கும் நிலையில், சில நாட்களுக்குள்ளே தீவிர பாதுகாப்பை ஏற்படுத்தும்.
நாய் போன்று மாறுவதுடன், உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் மரண சித்ரவதையை சந்திக்க நேரிடும். இதற்கு காரணம் ரேபிஸ் தாக்கியதும், முதலாவதாக பாதிக்கப்படுவது நரம்புமண்டலம் ஆகும்.
இதனால் நாம் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு குறிப்பிட்ட காலங்களில் தொடர்ந்து ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும்.
அதே போன்று நாய் எதுவும் கடித்துவிட்டாலோ, நகத்தைக் கொண்டு கீரினாலோ உடனே மருத்துவமனைக்கு சென்று ரேபிஸ் போட்டுக்கொள்வது மிகவும் முக்கியமாகும்.
காணொளியைக் காண இங்கே அழுத்தவும்
சமீபத்தில் கபடி வீரர் ஒருவர் தெருநாய்க்குட்டி ஒன்றினை காப்பாற்ற சென்று அதனால் ரேபிஸ் தாக்கத்திற்கு ஆளாகி அவஸ்தைப்பட்ட காட்சி வைரலாகியது.
இந்நிலையில் இங்கு பெண் ஒருவரின் காணொளி வைரலாகி வருகின்றது. பெண் ஒருவரை கை மற்றும் காலை பெல்ட் கொண்டு கட்டப்பட்டுள்ள நிலையில், அப்பெண் பயங்கரமாக அவஸ்தைபடுகின்றார்.
இவை ஒரு முன்னெச்சரிக்கை காணொளியாக எடுத்துக் கொண்டு, ரேபிஸ் ஊசியை நாம் வளர்க்கும் செல்லப்பிராணிக்கும் கட்டாயம் போடவும். மேலும் வெளியே உள்ள நாய்கள் கடித்தாலும் உடனடியாக அதற்கான சிகிச்சையைக் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
காணொளியைக் காண இங்கே அழுத்தவும்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |