புதிய ஆடம்பர பங்களாவை வாங்கிய ராஷி கண்ணா... சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நடிகை ராஷி கன்னா ஹைதராபாத்தில் புதிய வீடு ஒன்றை வாங்கி உள்ளார். இந்த வீட்டின் புதுமனை புகுவிழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமிதது வருகின்றது.
நடிகை ராஷி கண்ணா
தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் ராசி கண்ணா.
2013-ம் ஆண்டு ஜான் ஆபிரகாம நடிப்பில் வெளியான மெட்ராஸ் கஃபே என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்த தெலுங்கு மலையாளம் என இவருக்கு பட வாய்ப்புகள் குவியத்தொடங்கின. 2018-ம் ஆண்டு வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்தார்.
தொடர்ந்து விஷாலின் அயோக்கிய, ஜெயம் ரவியின் அடங்க மறு விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் ஆகிய படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
தற்போது சுந்தர்.சியின் அரண்மனை 4 படத்திலும் ராசி கண்ணா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் பல கோடி கொடுத்து அவர் தற்போது வாங்கி இருக்கும் புது வீட்டின் கிரஹப்ரவேசம் விமர்சையாக நடைபெற்றுள்ளது.
குடும்பத்துடன் அவர் புது வீட்டில் பூஜை செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்குகளையும் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
சுமார் 58 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கும் ராசி கண்ணா வாங்கி இருக்கும் மூன்றாம் வீடு அரண்மனை போல இருக்கிறமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |