Golden snake Video : தங்க நிறத்தில் பாம்பா? இணையத்தை ஆக்கிரமிக்கும் காட்சி
பொதுவாகவே பாம்புகள் அனைவருக்கு பயமான ஒரு உயிரினமாக காணப்படுகின்றது.பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்ற பழமொழியே இருக்கின்றது.
பாம்புகளை கண்டு மனிதர்கள் பயப்படுவதற்கு காரணம் அதன் விஷ தன்மை தான்.பாம்பு தீண்டினால் உயிரிழப்பு ஏற்படுவதால் தான் மனிதர்கள் அஞ்சுகின்றார்கள்.
ஆனால் பாம்புக்கு விஷம் இருப்பதற்கு காரணம் அதன் இறையை எளிதாக வேட்டையாடுவதற்காகவே ஆகும்.
இது மனிதர்களை தீண்டுவதது தன்னை தாக்கிவிடுவார்கள் என்ற பயத்தினால் தான். என்னதான் பாம்பின் மீது பயம் இருந்தாலும் அதனை பர்ப்பதற்கு அனைவமே விரும்புவார்கள்.
அதன் அழகில் இருக்கும் வசீகர தன்மை அதனை பார்க்க தூண்டுகின்றது. இந்த நிலையில் தங்க நிறத்திலான பாம்பு வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தங்க நிறத்திலான ஆறடி பாம்பு ஒன்று லாவகமாக சாலையை கடந்து செல்லும் காட்சியை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள், அதனை ஒளிபதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.
இந்த இந்த பாம்பின் நிறம் காரணமான இந்த காணொளி இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது. பலரும் உண்மையில் இப்படி ஒரு பாம்பு இனம் உள்ளதா என கேள்வி எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Golden snake ? pic.twitter.com/kYnJ52gCEa
— Shanthosh (@shanthosh) April 4, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |