இந்த பெண் யார் என்று தெரிகிறதா? பிரபல தமிழ்பட நடிகையாம்
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம்வருகிறார் ராஷி கண்ணா.
தமிழில் அயோக்யா, அடங்க மறு, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார், தற்போது நடிகர் தனுஷுடன் திருச்சிற்றம்பலம், கார்த்தியுடன் சர்தார் படங்களில் நடித்து வருகிறார்.
கொரோனா காலத்தில் உதவி
நடிகை என்பதையும் தாண்டி கொரோனா காலக்கட்டத்தில் இவர் செய்த உதவிகள், ரசிகர்களுக்கு ராஷி கண்ணா மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்தியது.
கஷ்டப்படும் மக்களுக்காக மீது பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பலருக்கும் உதவிகள் செய்து வந்தார்.
மேலும் தன்னுடைய வருங்கால கணவர் ஆன்மீகவாதியாக இருக்க வேண்டும் என்றும், ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவரை மட்டுமே திருமணம் செய்து கொள்வேன் எனவும் வெளிப்படையாக அறிவித்தார்.
கஷ்டங்களை பகிர்ந்த நடிகை
இந்நிலையில் ஆரம்ப காலக்கட்டத்தில் சினிமாவில் தான் அனுபவித்த கஷ்டங்களை பற்றி ராஷி கண்ணா பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “நான் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் நிறைய அவமானங்களை சந்தித்தேன்.
எனது உடல் தோற்றத்தை பார்த்து பலரும் என்னை கேலி செய்தார்கள். அப்போது நான் உடல் எடை கூடி குண்டாக இருப்பேன்.
என்னை பார்த்து சிலர் கியாஸ் டேங்கர் லாரி என்று சொல்லி ஏளனம் செய்தார்கள். சமூக வலைத்தளங்களிலும் இது போன்று என்னை கேலி செய்தார்கள்.
இதனால் மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதன் பின்னர் கடும் உடற்பயிற்சிகள் செய்து எனது தேகத்தின் தோற்றத்தை முற்றிலும் மாற்றினேன்'' என கூறியுள்ளார்.
அண்ணியுடன் நடிகர் தனுஷ்- வைரல் புகைப்படம்