நடிகை ராதிகா வீட்டில் அரங்கேறிய கொண்டாட்டம்! ஜோடியின் வைரல் புகைப்படம்
நடிகை ராதிகா மற்றும் சரத்குமாரின் 22வது திருமண நாள் என்பதால், மனைவியுடன் எடுத்த அழகான புகைப்படங்களை தொகுத்து காணொளியாக வெளியிட்டுள்ளார் நடிகர் சரத்குமார்.
சரத்குமார் மற்றும் ராதிகா
தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகமாகி, பின்பு ஹீரோவாக நடித்து பிரபலமானாவர் தான் நடிகர் சரத்குமார். மக்களால் சுப்ரீம் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர் 2001ம் ஆண்டு ராதிகாவைக் காதலித்து திருமணம் கொண்டார்.
திருமணத்திற்கு பின்பு இருவரும் தங்களது நடிப்பில் பிஸியாகி இருந்து வருகின்றனர். இதில் சரத்குமார் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன், வாரிசு படங்களில் நடித்து பயங்கர வெற்றியை கண்டுள்ளார்.
ராதிகா சினிமா மட்டுமின்றி சின்னத்திரையிலும் நடித்து மக்களை கவர்ந்து வருகின்றனர். கடந்தாண்டு அருண்விஜய் நடிப்பில் வெளியான யானை, சிம்புவின் வெந்து தணிந்தது காடு மற்றும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன லவ் டுடே ஆகிய படங்களில் எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தி உண்மையான அம்மாவாகவே நடித்திருந்தார்.
இந்நிலையில் இன்று தங்களது 22வது திருமண ஆண்டை கொண்டாடியுள்ளனர். மனைவியுடன் எடுத்த புகைப்படங்களை காணொளியாக வெளியிட்டுள்ளார்.
சரத்குமார் காணொளியில், “22 வருடங்கள், அன்பு, புரிதல், தியாகம், ஒற்றுமை என பல மகிழ்ச்சியான தருணங்கள் நிறைந்த எங்கள் வாழ்வின் நீண்ட பேரின்பப் பயணம் இது.
இதுவரை வாழ்க்கையின் அனைத்து உணர்ச்சிகளையும், மகிழ்ச்சியையும், சோகத்தையும் பார்த்திருந்தாலும், வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை அறிய வைத்ததற்கு நன்றி.
இன்று போல் நாம் எப்போதும் ஒன்றாகவும், நம் அழகான குடும்பத்துடனும் ஒற்றுமையாக வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.