கறுப்பின வன்முறைக்கு எதிராக மண்டியிட மறுத்த வீரர் டி காக்! அணியில் இருந்து அதிரடி நீக்கம் ஏன்?
தென்னாப்பிரிக்க அணி வீரரான டி காக் இனவெறிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு களத்தில் முட்டி போட மறுத்ததால் அணியில் நீக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஆண்டில் கறுப்பின இளைஞரான ஜார்ஜ் பிளாய்டு என்ற நபர் போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
அதன் பின்னர் கறுப்பின மக்கள் வன்முறைக்கு எதிராக Black Lives Matter என்ற இயக்கம் தீவிர பிரசாரத்தைச் செய்து வருகிறது. இதனைத்தொடர்ந்து, விளையாட்டு வீரர்கள் இனவெறிக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை காட்டும் விதமாகப் போட்டி தொடங்கும் முன் முட்டி போடுவார்கள். இது "taking a knee" என்று அழைக்கப்படுகிறது.
அண்மையில் கூட இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு முன் இந்திய வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்த தகவல் பெரும் வரவேற்பை பெற்றது. இதனிடையே, தற்போது வெள்ளை இன வீரர்கள் இப்படி முட்டி போட மறுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அவர், தென்னாப்பிரிக்கா தொடக்க ஆட்டக்காரரான டி காக் மண்டியிட மறுத்து இருக்கிறார். அப்போது அணியின் நிர்வாகம் அவருக்கு உத்தரவிட்டும் கூட மறுத்தாக கூறப்படுகிறது. இதனால், கடந்த போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரானதில் புறக்கணிப்பட்டார்.
முதலில் சொந்த காரணங்களால் அவர் போட்டியில் விளையாடவில்லை என கூறப்பட்ட நிலையில், அதன் பின்னரே "taking a knee" பிரசாரம் தொடர்பாகவே அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
எனவே இனி வரும் போட்டியில் அவர் விளையாடுவாரா? என அணியின் நிர்வாகம் எந்த ஒரு தகவலை அளிக்காமல் உள்ளது.