டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து நட்சத்திர வீரர் திடீர் ஓய்வு! அதிர்ச்சியில் ரசிகர்கள்
தென் ஆப்பிரிக்கா விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான குவிண்டன் டி காக், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் டி காக் ஓய்வை உறுதிப்படுத்தியுள்ளது.
தனது குடும்பத்துடன் நேரம் செலவிடும் நோக்கில் டி காக் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து உடனடி ஓய்வை அறிவித்ததாக தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் குறிப்பிட்டுள்ளது.
டி காக்-சாஷா தம்பதிக்கு எதிர்வரும் நாட்களில் குழந்தை பிறக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் 113 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி தோல்வியடைந்ததை தொடர்ந்து டி காக்கின் ஓய்வு அறிவிப்பு வெளியானது.
BREAKING: #Proteas wicket-keeper batsman, Quinton de Kock has announced his retirement from Test cricket with immediate effect, citing his intentions to spend more time with his growing family.
— Cricket South Africa (@OfficialCSA) December 30, 2021
Full statement: https://t.co/Tssys5FJMI pic.twitter.com/kVO8d1e0Ex
29 வயதான டி காக், தென் ஆப்பிரிக்கா அணிக்காக 54 டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி 6 சதங்களுடன் 3300 ரன்கள் அடித்துள்ளார்.
குவிண்டன் டி காக்கின் திடீர் ஓய்வு கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சயைாக அமைந்துள்ளது.