Chankya niti: இப்படியான ஆண்களை திருமணம் செய்ங்க.. கவலையே இருக்காது!
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
சாணக்கியரின் கூற்றுப்படி, திருமணத்திற்கு பின்னர் தன்னுடைய மனைவிகளுக்கு சிறந்த கணவர்களாக இருக்கும் ஆண்களிடம் சில நல்ல விடயங்கள் இருக்கும்.
அந்த வகையில், மனைவிகளுக்கு நல்ல கணவர்களாகவும் குடும்பத்தினருக்கு நல்ல குடும்ப தலைவராகவும் இருக்கும் ஆண்களிடம் காணப்படும் நல்ல விடயங்கள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
சாணக்கியர் கூறும் அறிவுரை
1. பெண்கள் எப்போதும் தன்னுடைய துணையை புத்திசாலித்தனம் கொண்டவர்களை தெரிவு செய்தால் அவர்கள் வாழ்க்கையில் எந்தவித கஷ்டமும் இல்லாமல் நிம்மதியாக இருப்பார்கள். ஏனெனின் புத்திசாலித்தனம் இல்லாதவர்கள் மிருகத்திற்கு சமம் என சாணக்கியர் எச்சரிக்கிறார்.
2. தன்னுடைய துணை துணிச்சலானவராக இருக்கும் பொழுது அவருடைய குடும்பம் பாதுகாப்பாக இருக்கும். அவரை திருமணம் செய்த பெண்களும் நிம்மதியாக இருப்பார்கள். தன்னம்பிக்கையுடன் பெண்களும் அவர்களின் வேலையை பார்க்கலாம்.
3. ஒழுக்கமானவர்களை திருமணம் செய்யும் பெண்களின் வாழ்க்கை ஒருபோதும் தோல்வியில் முடியாது. அதிலும் கணவர்கள் ஒழுக்கமானவராக இருந்தால் குழந்தைகள், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒழுக்கமாக இருப்பார்கள்.
4. பொறுமையுடன் இருக்கும் ஆண்களை திருமணம் செய்தால் பெண்கள் சந்தோஷமாக இருப்பார்கள் என சாணக்கியர் கூறுகிறார். ஏனெனின் பொறுமையுடன் இருக்கும் ஆண்கள் எப்படியான சூழ்நிலை வந்தாலும் அவசரம் இல்லாமல் முடிவெடுப்பார்கள்.
5. நேர்மையான கணவர் உள்ள மனைவிகள் நம்பிக்கையாக எந்தவொரு வேலையையும் கொடுக்கலாம். ஏனெனின் குடும்ப வாழ்க்கைக்கு வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையான குணம் அவசியமாகும்.
6. ஒரு ஆண் திருமணத்திற்கு கணவனுக்கு பின்னர் குடும்ப பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவனுடைய பொருளதார தேவையை பூர்த்திச் செய்து கொண்டு குடும்பத்தினரையும் சந்தோஷமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
