சமூகத்தில் உயர்ந்த மரியாதை வேண்டுமா? அப்போ இந்த குணங்களை வளர்த்துக்கோங்க- சாணக்கியர் நீதி
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
சாணக்கியரின் கூற்றுப்படி, சமூகத்தில் நல்ல மரியாதையுடன் வாழ வேண்டும் என்றால் குறிப்பிட்ட சில விடயங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். என கூறுகிறார்.
அந்த வகையில், சமூகத்தில் உங்களின் மரியாதையை அதிகரிக்க வேண்டும் என்றால் என்னென்ன குணங்கள் உங்களிடம் இருக்க வேண்டும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சமூகத்தில் மதிக்கப்பட வேண்டுமா?
1. சாணக்கிய நீதியின் படி, ஒருவருக்கு எப்போதும் நல்ல உறவுகள் சுற்றியிருந்தால் மரியாதை தானாக வரும் என கூறப்படுகிறது. மோசமான நண்பர்களுடன் பழக்கம் வைத்து கொண்டால் உங்களின் குணமும் காலப்போக்கில் தீயதாக மாறும்.
2. ஒருவருடைய பேச்சில் எப்போதும் எளிமை மற்றும் மென்மை இருக்க வேண்டும். அப்படியானவர்கள் பலரால் மதிக்கப்படுவார்கள். பேச்சில் அர்த்தம் இருக்க வேண்டும். அத்துடன் உண்மை, இனிமை கண்டிப்பாக இருக்க வேண்டும்.
3. நாம் செய்யும் தவறுகளில் இருந்து புதிய பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும். தவறுகளை திருத்திக் கொண்டு வாழ்பவர்கள் வாழ்க்கையின் உச்சத்தை காண்பார்கள்.
4. பொது இடங்களில் எப்போதும் பணிவாகவும் கண்ணியமாகவும் நடந்து கொள்ள வேண்டும். இந்த குணம் இருப்பவர்கள் எல்லா இடங்களிலும் மதிக்கப்படுவார்கள். தேவையற்ற சிக்கல்களில் சிக்கிக் கொள்ளவும் மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உதவ மற்றவர்கள் எப்போதும் முன்வருவார்கள்.
5. ஒருவரிடம் இருக்கும் அறிவு மரியாதையை அதிகரிக்க செய்யும். சாணக்கியர் கூற்றின்படி, ஒருவர் எப்போதும் தனது அறிவை விரிவுபடுத்த முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். அறிவை பயன்படுத்தி உச்சத்திற்கு செல்பவர்கள் சமூக தலைவர்களாகவும் வரலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |