கோழி இறைச்சியை விட காடை இறைச்சி சிறந்ததா? ஆச்சரியமளிக்கும் ஆரோக்கிய நன்மைகள்
நமது உடம்பிற்கு கோழி இறைச்சியை விட காடை இறைச்சி அளிக்கும் ஆரோக்கிய நன்மையினைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
காடை இறைச்சி
பொதுவாக காடை இறைச்சி கொழுப்பு சத்து இல்லாதது மட்டுமின்றி, ஆரோக்கியத்திலும் சிறந்ததாகும். கோழி இறைச்சியினை விட காடை இறைச்சி சுவையிலும் சிறந்ததாகும்.
சித்த மருத்துவத்தில் "கட்டில் கிடப்பார்க்கு காட்டில் படும் காடை" என்ற பாடல் உள்ளது. அதாவது நோயால் உடல் இளைத்தவர்கள் காடை இறைச்சியுடன் சோறு உண்டால் வலிமை பெறுவார்கள் என்று குறித்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது. மேலும் தமிழ் நூல் ஒன்றும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
கொழுப்பு குறைவு
காடை இறைச்சியில் கோழி இறைச்சியினை விட குறைவான கொழுப்பும், ஏராளமான உயிர்ச்சத்துக்களும் நிறைந்துள்ளது.
குறிப்பாக மூளை வளர்ச்சிக்கு அவசியமான சத்தையும், வைட்டமின்கள் ஏ, பி-1, பி, டி, கே மற்றும் புரதம், கால்சியம், இரும்பு, துத்தநாகம் போன்ற சத்துக்களும் உள்ளது.
நன்மைகள் என்ன?
காடை இறைச்சியில் அதிகளவு ஒலிக் அமிலம் உள்ளதால், இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றது.
நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் காடை இறைச்சியினை சேர்த்துக் கொள்வதால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
கண்பார்வை பாதிப்பினைத் தடுப்பதுடன், விழித்திரைகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது.
மேலும் இந்த இறைச்சியில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்கள் மூட்டு தேய்மானத்தை தடுப்பதற்கு பெரிதும் உதவுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
