மலைப்பாம்பின் கழுத்தை நெரிக்கும் ராஜ நாகம்... நடுநடுங்க வைக்கும் அதிர்ச்சி காட்சி
மலைப்பாம்பிற்கும், ராஜ நாகத்திற்கு இடையே ஏற்பட்ட சண்டை காட்சி இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.
ஆனால் சில தருணங்களில் சமையலறை, வாகனங்கள், படுக்கையறை இவற்றிலும் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.
மலைப்பாம்புக்கும், ராஜ நாகப்பாம்புக்கும் இடையே கடும் சண்டை நடப்பது வீடியோவில் தெரிகிறது. மலைப்பாம்பு ராஜ நாகப்பாம்பின் கழுத்தில் இறுக்கமாகச் சுற்றியுள்ளது.
ராஜ நாகமும் அதனை எதிர்த்து போராடுகிறது. இரண்டு பாம்புகளும் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்கின்றன. பார்ப்பதற்கு பயங்கரமாக இருக்கும் இக்காட்சியை @snake__videos மூலம் 'Python chocke king cobra' என்ற தலைப்புடன் பகிர்ந்துள்ளார்.