Photo Ablum: மேளதாளத்துடன் தடபுடலாக நடந்த திருமணம்- மணமக்களை பார்த்து வியந்து போன நெட்டிசன்கள்
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவின் திருமணம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் நிலையில், தம்பதிகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பிவி சிந்துவின் திருமணம்
ராஜஸ்தானில் பிவி சிந்து - வெங்கட்டா தத்தா சாய் திருமணம் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது.
இவர்களின் திருமணத்தில் சினிமா பிரபலங்கள், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ராஜஸ்தானில் உதய் சாகர் லேக் என்ற பகுதியில் உள்ள ஸீனிக் ராபுல்ஸ் என்ற சொகுசு ஹோட்டலில் தான் இவர்களின் திருமணம் நடைபெற்றது.
புதுமணத் தம்பதிகளான பிவி சிந்து- வெங்கட்டா தத்தா சாய் இருவரும் திருமண உறுதிமொழி எடுத்து கொண்டு திருமண பந்தத்திற்குள் நுழைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்து முடிந்துள்ளது.
பிவி சிந்துவின் கணவர் யார் தெரியுமா?
இந்த நிலையில், பிவி சிந்துவின் கணவர் வெங்கட்டா தத்தா சாய் போசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார்.
அவர் பெங்களூருவில் உள்ள இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில் டேட்டா சயின்ஸ் மற்றும் மெஷின் லேர்னிங்கில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
மேலும், கணக்கியல் மற்றும் நிதித்துறையில் இளங்கலைப் பட்டம் (BBA) பெற்றுள்ளார். ஜேஎஸ்டபுள்யூ (JSW), சோர் ஆப்பிள் அசெட் மேனேஜ்மென்ட் (Sour Apple Asset Management) ஆகிய நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார்.
டெல்லி கேப்பிடல்ஸ் ஐபிஎல் அணியின் நிர்வாகத்திலும் பங்கேற்று இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |