Brain Teaser Challenge:ஒரே குழப்பமா இருக்கே.. இளைஞரின் நிஜ மனைவி யார்? சூழ்ச்சி வலையில் கணவர்
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.
இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.
மனைவி யார்?
அந்தவகையில், இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இவரின் பக்கத்தில் இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்,“நான் தான் உன்னுடைய மனைவி. அவள் பொய் கூறுகிறாள்..” என்கிறார்.
வலது பக்கத்தில் நிற்பவர், “நமக்கு குழந்தைகள் இருக்கின்றன..” என அழுதுக் கொண்டே கூறுகிறார். இவர்களில் ஒருவர் தான் உண்மையான மனைவி, இளைஞருக்கு மனைவியை எப்படி கண்டுபிடிப்பது என தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்.
சுமாராக 8 விநாடிகளில் நிஜ மனைவியை கண்டுபிடிக்க வேண்டும். கொடுக்கப்பட்ட நேரத்தில் இளைஞரின் மனைவி யார் என கண்டுபிடித்து விட்டால் நீங்கள் ஒரு அறிவாளி தான் என்பதனை ஒப்புக் கொள்ளலாம்.
அப்படி கண்டுபிடித்தவர்களும், இவர்களில் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள புகைப்படத்தில் பார்த்து நிஜ மனைவி யார் என்பதனை தெரிந்து கொள்ளலாம்.
விடைக்கான காரணம்
- இளைஞரின் அருகிலுள்ள பெண்களில் ஒருவர் மாத்திரமே திருமணத்தின் போது மாற்றப்பட்ட மோதிரம் போட்டிருக்கிறார். அப்போது இளைஞரின் மனைவி வலதுப்பக்கத்தில் கண்ணீருடன் நிற்பவர் தான். மற்றவர் இளைஞருக்கு நினைவு இல்லாத காரணத்தினால் அவரை திசைத்திருப்புகிறார். அவர் கையில் எந்த அடையாளமும் இல்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |