ஆசையாக வந்த விஜய் ரசிகர்கள் மீது டென்சனான நிர்வாகி! அரசியலுக்கே வரல.. அதற்குள் இப்படியா?
விஜயை பார்க்க வேண்டும் என்று அவரின் வீட்டின் முன் குவிந்த ரசிகர்களை புஸ்லி ஆனந்த் கோவமாக அடித்து விரட்டியுள்ளார்.
இளைய தளபதி விஜய்
தமிழ் சினிமாவில் அதிகளவான ரசிகர்களை வைத்து முன்னணியில் இருக்கும் நடிகர் தான் விஜய்.
இவர் நடிப்பில் கடைசியாக “வாரிசு” திரைப்படம் வெளியாகியது. இதன் பின்னர் “லியோ” திரைப்படம் திரையரங்கிற்கு வரவுள்ளது.
இந்த நிலையில் இன்று 234 தொகுதி செயலாளர்களில் இன்று நடைபெறும் கூட்டத்தில் 117 தொகுதியை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மற்ற செயலாளர்கள் இனி வரும் நாட்களில் கலந்து கொள்வார்கள் என்ற செய்தி வெளியாகியிருக்கின்றது.
ரசிகர்களிடம் மோசமாக நடந்து கொண்ட நிர்வாகி
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விஜய் வீடு திரும்பும் போது அவரை காண்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அவரின் வீட்டு வாசலில் காத்திருந்தார்கள்.
அங்கிருந்தவர்களின் அலப்பறைகள் தாங்க முடியாத பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த் அங்கிருந்து ரசிகர்களை செல்லுமாறு கேட்டு கொண்டார்.
இதனை கணக்கெடுக்காமல் அங்கையே ரசிகர்கள் காத்திருந்தார்கள். இதனால் கோபமடைந்த புஸ்லி ஆனந்த் அவர்களை அங்கிருந்து விரட்டியுள்ளார்.
இதன்போது அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் அவரின் செயலை வீடியோவாக பதிவு செய்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்கள்.
Did u noticed....😲🔥?? #Leo @actorvijay 😍 pic.twitter.com/zYWnzp0uun
— Kettavan #LEO🥵 (@Itz_Kettavan_) July 11, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |