புஷ்பாவில் வரும் சிவப்பு சந்தன மரம் கோடிகளில் விலை போகுமா? அப்படி அதில் என்ன செய்கிறார்கள்?
பொதுவாகவே சந்தன மர கடத்தல் என்னறால் அனைவருக்கும் வீரப்பன் தான் நினைவிற்கு வருவார். ஆனால் இப்போது புஷ்பா திரைப்படம் தான் ஞாபகம் வரும்.
புஷ்பா திரைப்படத்தில் முதல் பாகம் சந்தனமர கடத்தலுடன் தொடர்புடைய கதைக்களத்தை கொண்டும் கடந்த 2021 ஆம் வெளிவந்தது. இதன் மாபெறும் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது.
அந்த வகையில் புஷ்பா 2 திரைப்பம் கடந்த டிசம்பர் 5 ஆம் திகதி திரைக்கு வந்து வெற்றிநடை போட்டு வருகின்றது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகின்றது.
சந்தன மரம் கடத்தி கோடீஸ்வரனாக இருப்பது போல் இந்த திரைப்பபடத்தில் புஷ்பா கதாபாத்திரம் சித்தரிக்கப்படுகின்றது.
உண்மையிலேயே செந்தந்தன மரம் உலக சந்தையில் கோடிகளில் விலைபோகின்றதா? அப்படி அந்த மரத்தை வாங்கி எதற்கு பயன்படுத்துகின்றார்கள் என்ற வினாக்களுக்கான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
அதன் விலை என்ன?
சிவப்பு சந்தனத்தின் விலை உலக சந்தையில் தங்கத்தில் விலை போல் கணிசமாக மாறுபடும். அதன் சராசரி விலை கிலோவுக்கு இந்திய விலையில் 50,000 முதல் 1,00,000 வரையில் விலை போகின்றது. மேலும் உயர்தர சிவப்பு சந்தனத்தின் விலை ஒரு கிலோவுக்கு 2,00,000 வரையிலும் விற்கப்படுகின்றது.
இவ்வளவு விலை கொடுத்து சந்தன மரத்தை கொள்வனவு செய்வதற்கு பல்வேறு காரணங்கள் காணப்படுகின்றது. இது மிகவும் அரிய வகை மரமாகும். அதனை வெட்டுவதற்கு அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதனை வெட்டுவதில் காணப்படும் சிரமம், மற்றும் அதன் முக்கியத்தும் மற்றும் பயன்கள் காரணமாக இது அதிக விலைக்கு விற்பனையாகின்றது.
சிவப்பு சந்தன மரம் எதற்கு பயன்படுகின்றது?
இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்ட இந்த மரம் மிகவும் விலையுயர்ந்த மற்றும் அரிய வகை மரங்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இந்த மரங்கள் செழித்து வளர்கின்றன.
இந்த மரம் உயர்தர மரச்சாமான்கள், சிலைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் தயாரிப்பில் முக்கிய இடம் வகிக்கின்றது.
சிவப்பு சந்தனத்தின் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு, ஆஸ்ட்ரிஜென்ட் மற்றும் ஆக்ஸிஜனேற்ற விளைவுகள் ஆனது, சொரியாசிஸ், பதனிடப்பட்ட தோல், எண்ணெய் சருமம், ஹைப்பர் பிக்மென்டேஷன், முகப்பரு, பருக்கள் மற்றும் விரைவில் வயதானவர் போல் தோற்றமளிப்பது, போன்ற பல தோல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.
கிட்டத்தட்ட அனைத்து தோல் பிரச்சினைகளுக்கும் இது ஒரு சிறந்த மூலிகையாக திகழ்கிறது.அந்த மரத்தை கொண்டு பல்வேறு அழகுசாதன பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
சிவப்பு சந்தனத்தின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் வயிற்று செல்கள் சேதமடைவதைத் தடுக்க உதவும், இதனால் வயிற்றுப் புண் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கலாம்.
சிவப்பு சந்தனத்தில் துத்தநாகம் அதிக அளவில் இருக்கின்றது. மேலும், இதன் நீரிழிவு எதிர்ப்பு விளைவு காரணமாக, இன்சுலின் தொகுப்பு, சுரப்பு மற்றும் சேமிப்பில், சிவப்பு சந்தனம் முக்கிய பங்கு வகிக்கின்றது.
அதில் செய்யப்படும் அணிகலகன்கள் மற்றும் பாலியல் சார்ந்த உற்பத்தி பொருட்கள் மன அழுத்தத்தை போக்கவும் இனப்பெருக்க ஆற்றலை அதிகரிகவும் சிறப்பு வாய்ந்ததாக காணப்டுகின்றது.
அதில் காணப்டும் அளப்பரிய மருத்துவ குணங்கள் காரணமாக பல்வேறு மருந்து பொருட்கள் தாயரிப்பிலும் முக்கிய இடம் வகிக்கின்றது.
அதன் தேவை அதிகமாக இருக்கும் அதே நேரத்தில் இது ஒரு அரிய வகை மரமாகவும் இருப்பதன் காரணமாகவே நாளுக்கு நாள் அதன் மதிப்பு அதிகரித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |