கோடிகளில் நிதியுதவி.. புஷ்பா -2 பட நெரிசலில் உயிரிழந்த பெண்- மீண்டும் கைது செய்யப்படலாமா?
புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் காட்சியின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு கோடிகளில் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
புஷ்பா 2
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன்.
இவர் நடிப்பில் கடந்த டிசம்பர் 5ஆம் திகதி “புஷ்பா 2” திரைப்படம் வெளியானது.
இந்த படத்தின் ரிலீசுக்கு ஒரு நாளுக்கு முன்னதாகவே படத்தின் பிரீமியர் காட்சி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் திரையிடப்பட்டது.
முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வரும் ரசிகர்களை விட அதிகமான ரசிகர்கள் பிரீமியர் காட்சியை பார்க்க திரையரங்கம் முன் திரண்டனர். அப்போது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, அல்லு அர்ஜுன் சந்தியா திரையரங்கிற்கு வந்துள்ளார்.
இதனால் அங்கிருந்த ரசிகர்கள் பலர் நடிகர் அல்லு அர்ஜுனை பார்க்க போட்டி போட்டுக் கொண்டு முன் நோக்கி சென்றுள்ளனர்.
மரணமடைந்த ரசிகை
இந்த நிலையில், ரசிகர்கள் எல்லை மீறி நடந்து கொண்டுள்ளனர். நடிகர் அல்லு அர்ஜுனின் பாதுகாவலர்கள் சிலரை தள்ளிவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 35 வயது ரசிகையொருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் குறித்த பெண்ணின் 8 வயது மகனும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்த பெண்ணின் மகனுக்கு மூளைச்சாவு அடைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து மீண்டும் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோடிகளில் நிதியுதவி
பெண்ணின் மரணத்தில் அல்லு அர்ஜுன் மீது தான் தவறு உள்ளதாக ஹைதராபாத்தில் உள்ள அவருடைய வீட்டை சில போராட்டக்காரர்கள் சூறையாடிய சம்பவம் அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு தரப்பினர் அல்லு அர்ஜுனுக்கு எதிராக இருந்தாலும், இன்னொரு தரப்பு அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது.
இப்படியொரு சமயத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு படக்குழு சார்பில் ரூ.2 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது, நடிகர் அல்லு அர்ஜுன் சார்பில் ரூ.1 கோடியும், தயாரிப்பாளர் சார்பில் ரூ.50 லட்சம் மற்றும் இயக்குனர் சுகுமார் சார்பில் ரூ.50 லட்சமும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |