பர்ஸில் பணம் தங்குவது இல்லையா? இந்த பொருளை வைத்தால் பணக்கஷ்டமே இருக்காது
உங்களுடைய பர்ஸில் சில பொருட்களை வைத்தால் பணக் கஷ்டம் என்பது இல்லாமல் செழிப்புடன் இருக்கும்.
தடைகள் நீங்க என்ன செய்யலாம்?
வேலையில்லாமல் சிரமப்படுபவர்கள், சில பரிகாரத்தினை செய்துவிட்டு சோம்பேறியாக இருந்துவிடக்கூடாது. தனது முயற்சியினை நிச்சயம் செய்ய வேண்டும்.
நல்ல காரியத்தை செய்யும் போதும் தடை இருந்தால் முதலில் நாம் உதவிக்கு அழைக்க வேண்டியது விநாயகப் பெருமானை தான், ஆனைமுகத்தோன் எல்லா வினைகளையும் தீர்க்க வல்லவர்.
திங்கட்கிழமை தோறும் விநாயகருக்கு இரண்டு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றிவைத்து, தோப்புக்கரணம் போட்டு வேண்டிக் கொள்ளவும்.
இதே போன்று அருகம்புல் மாலை சாற்றி விநாயகயரை வணங்கினால், தடை அகன்று போகும். “ஓம் கணபதியே நமஹ” எனும் மந்திரத்தை சொல்லி வருவதால் நல்ல வேலை அமையும்.
பொதுவாக சிகப்பு நிறம் என்றாலே அது அபாயத்தை குறிப்பதாகவே நாம் நினைத்து வருகின்றோம். ஆனால் உங்கள் பர்ஸில் சின்ன அளவில் சிவப்பு நிற துணியை வைத்து கொண்டால் பல அற்புதங்கள் நடக்கும்.
அம்மனுக்கு உகந்த நிறம் இதுவாக இருப்பதால், வெளியே செல்லும் போது பர்ஸில் வைத்துக் கொண்டால் நல்லது. நிச்சயம் வேலையும் கிடைக்கும்.
மேலும் செய்ய வேண்டியது என்ன?
சனிக்கிழமைகளில் காகங்களுக்கு அரிசி சாதம் வழங்கினால் சீக்கிரம் நல்ல வேலை கிடைக்கும்.
நீங்க இடும் கையெழுத்து உங்களுடைய தலையெழுத்தை நிர்ணயிக்கின்றதாம். ஆம் கையெழுத்து போட்டு முடித்து கடைசியில் முற்றுப்புள்ளி வைப்பது கூடாதாம். இவ்வாறு செய்தால் முன்னேற்றம் இருக்காதாம்.
குருவியின் அம்சமுடைய பசுவைக் கண்டால் மஞ்சள் வாழைப்பழம் வாங்கிக் கொடுத்தால் நல்லது நடக்கும்.