கடன் தொல்லை நீங்க வேண்டுமா?... புரட்டாசி சனியில் 3 தீபத்தை ஏற்றி வழிபட்டால் போதும்
பொதுவாகவே நாம் தினமும் பல நேர்த்திகளை நினைத்து தினமும் விளக்கேற்றி வழிபடுவோம். அதிலும் இந்த புரட்டாசி மாதம் மிக முக்கியமான மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பல பிரச்சினைகள் தீர வேண்டும் என்று நினைத்து விளக்கேற்றி வழிபட்டால் பல பிரச்சிகைள் தீரும்.
புரட்டாசி சனி
புரட்டாசி என்பது தமிழ் இந்து நாட்காட்டியில் 6வது மாதம் இது செப்டம்பர் நடுப்பகுதி முதல் அக்டோபர் நடுப்பகுதி வரை நீடிக்கும். இந்த புரட்டாசி மாதத்தில் திருமணம் செய்யக் கூடாது, அசைவம் சமைக்கவும், சாப்பிடவும் கூடாது என்று பல நிபந்தனைகள் இருக்கிறது. புரட்டாசி என்பது சூரியன் புதனால் ஆளப்படும் கன்னி ராசியில் இருக்கும் மாதம்.
புதனின் அதிபதி விஷ்ணு, செல்வத்தின் கடவுள். எனவே, புரட்டாசி மாதம் முழுவதும் குறிப்பாக சனிக்கிழமைகள் விஷ்ணு பக்தர்களால் மிகவும் போற்றப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில் விஷ்ணு பகவானை வெங்கடேசப் பெருமானாக வழிபடுவது செல்வச் செழிப்பை கொடுக்கும்.
இந்த மாதத்தில் சனி பகவான் தனது சக்திகளை இழக்கிறார் என்று நம்பப்படுகிறது. எனவே, சனிக்கிழமைகளில் விஷ்ணுவை வழிபடுவது அவரது அருள் ஆசீர்வாதங்களை உங்களுக்குத் தருகிறது மற்றும் சனியின் தீய விளைவுகளை குறையும் என்றும் நம்பப்படுகிறது.
புரட்டாசி சனியில் ஏற்ற வேண்டிய விளக்கு
இந்த புரட்டாசி மாதத்தில் பெருமாளை நினைத்து இந்த விளக்குகளை ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லை தீரும் என்று சொல்லுப்படுகிறது. அந்தவகையில் நீங்கள் ஏற்ற வேண்டிய 3 விளக்குகள் என்ன என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
பச்சரிசை ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி வெல்லம் மற்றும் ஏலக்காய் என்பவற்றை கலந்து மாவிளக்கு தயாரித்து அதில் நெய் ஊற்றி விளக்கு ஏற்றினால் கடன் தொல்லை, திருமண தடை என்பன நீங்கும்.
விளக்கு தட்டில் கல் உப்பை பரப்பி அதில் சோம்பு, கிராம்பு ஏலக்காய் போட்டு அதன் மேல் அகல் விளக்கு வைத்து நெய் ஊற்றி விளக்கு ஏற்றினால் மகாலட்சுமியின் அருளால் கடன் பிரச்சினை தீரும்.
இரண்டு பெரிய நெல்லிக்காயை லேசாக நறுக்கி அதில் இருக்கும் விதையை நீக்கி நெய் ஊற்றி விளக்கேற்றினால் குபேரணின் அருள் பரிபூரணமாக கிடைத்து செல்வம் செழிக்கும்.
குறிப்பு : இந்த தீபங்களை ஏற்றி வைத்து ஓம் மகா லெட்சுமி தாயே போற்றி என்ற மந்திரத்தை சொல்லி மனதார வழிபடும் போது கஷ்டங்கள், கடன் தொல்லைகள் கண்டிப்பாக தீரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |