முககவசம் அணியாமலும், எச்சு துப்பினாலும் இதுதான் தண்டனை.. கடுமையான உத்தரவை வெளியிட்ட அரசு!
உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவ தொடங்கிய நிலையில், பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இந்தியாவில், மகாராஷ்டிரா அவுரங்காபாத் மாவட்டத்தில் அதிகரித்து வரும் தொற்றால் வார விடுமுறை நாட்களில் முழு அடைப்பு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், நாக்பூர் மாவட்டத்தில் கடந்த 15-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை ஒரு வார கால ஊரடங்கு உத்தரவு அமலானது. இவை தவிர அமராவதி, யவத்மல் மற்றும் லத்தூர் போன்ற மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் முன்பே விதிக்கப்பட்டு விட்டன. இந்த நிலையில், மகாராஷ்டிராவில் தொற்று அதிகரிப்புகளைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதில், பொது இடங்களில் முக கவசம் அணியாமல் காணப்படும் எந்த நபருக்கும் ரூ.500 அபராதம் விதிக்கலாம். பொது இடங்களில் யாரேனும் எச்சில் துப்புவது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், பீச் மற்றும் பூந்தோட்டங்கள் உள்ளிட்ட பொது இடங்களை இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இந்த நடைமுறை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இதனை மீறுபவர்கள் தலா ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும் எனவும் அரசு உத்தரவில் தெரிவித்துள்ளது.