வீட்டிலிருந்து கடைசியாக மருத்துவமனைக்கு கிளம்பிய புனித்: வியர்வையை துடைத்துக்கொண்டே சென்ற சோகம்! வெளியானது சிசிடிவி காட்சி
நடிகர் புனித் மருத்துவமனைக்கு தனது மனைவியுடன் இறுதியாக சென்ற சிசிடிவி காட்சி ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.
பிரபல கன்னட நடிகரான புனித் ராஜ்குமார் கடந்த 29ம் திகதி திடீர் உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மரண செய்தியிலிருந்து மீளாமல் ரசிகர்கள், பிரபலங்கள் அனைவரும் சோகத்தில் இருந்து வருகின்றனர்.
தற்போது இவர் மரணத்திற்கு பின்பு இவர் செய்த செயல்கள் பல இணையத்தில் காணொளியாகவும், தகவல்களாகவும் வெளிவந்து ரசிகர்களை மேலும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இவரது குடும்ப மருத்துவரிடம் பரிசோதனைக்கு செல்லும் போது நன்றாகவே புனித் இருந்ததாக கூறப்பட்டது. அதன் பின்பு தொடர்ந்து வியர்த்துக் கொண்டே இருந்ததால் ஈ.சி.ஜி எடுத்து பார்த்ததில் இதயத்தின் செயல்பாட்டில் மாற்றங்களை அவதானிக்க முடிந்தது.
அப்போது மருத்துவர் இதயத்தில் பிரச்சினை உள்ளதாகவும், அடுத்த 5 நிமிடத்தில் விக்ரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் கோரியுள்ளார்.
அதுவரை தனக்கு வலி எதுவும் இல்லை என்று கூறிய புனித் இறுதியாக வெளியே வரும் போது ஆம்புலன்ஸ் வேண்டாம் நான் காரில் செல்கிறேன்... மிகவும் சோர்வாகவும், மயக்கம் ஏற்படுவது போன்று இருக்கின்றது என்று கூறியுள்ளார்.
இதற்கு குடும்ப மருத்துவர் சரி என்று கூறியதோடு, காரில் படுத்துக்கொள்ளுமாறு கூறியதையடுத்து, மனைவியின் மடியில் படுத்து சென்றுள்ளார். ஆனால் காரில் ஏறி விக்ரம் மருத்துவமனைக்கு சென்ற அந்த இடைப்பட்ட ஐந்து நிமிடத்தில் கார்டியாக் அரெஸ்ட் வந்து இதயம் செயலிழந்துள்ளது.
தற்போது புனித் ராஜ்குமார் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு சென்ற சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த காட்சியில் நீல நிற உடையணிந்து வெளியே வரும் புனித்திற்கு அவரது செக்கியூரிட்டி வணக்கம் வைக்கின்றார். பதிலுக்கு புனித்தும் வணக்கம் வைத்துவிட்டு பின்பு காரில் தானாகவே ஏறி அமர்வதை அவதானிக்க முடிகின்றது.