தந்தையை தொட்டுப்பார்த்து கதறிய மகள்! இறப்பதற்கு முன்பு புனித் பாடிய பாடல்: வைரலாகும் காணொளி
இறப்பதற்கு ஒரு நாள் முன்பு கன்னட இசையமைப்பாளர் குரு கிரண் பிறந்தநாள் விழாவில் மறைந்த கன்னட நடிகர் புனித் பாடிய காட்சி வைரலாகி வருகின்றது.
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நேற்று காலை உடற்பயிற்சியின் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மரணம் ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதோடு, பலரும் கண்ணீருடன் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இவரது மகள் வெளிநாட்டில் இருந்து வந்து தந்தையின் முகத்தை தொட்டுப்பார்த்து கதறி அழுதுள்ளார். மகள் வருவதற்கு தாமதமாகியதால் புனித்தின் இறுதிச்சடங்கு நாளை காலை நடைபெற இருக்கின்றது.
புனித் மறைவினை தாங்கிக்கொள்ள முடியாத ரசிகர்கள் அவர் கடைசியாக பாடிய பாடல் காட்சியினை இணையத்தில் வெளியிட்டு இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
புனித் இறப்பதற்கு முதல் நாள் கன்னட இசையமைப்பாளர் குரு கிரண் பிறந்தநாள் விழாவில் பாடிய பாடலை தற்போது வைரலாக்கி வருகின்றனர்.