இறந்த பின்பும் உயிர்வாழும் சூப்பர் ஸ்டார்.... புனித் ராஜ்குமார் கண்களை எடுத்துச்சென்ற ஆம்புலன்ஸ்! கதறி அழும் ரசிகர்கள்
மறைந்த பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் இறந்த பிறகும் செய்த உதவி தற்போது இணையத்தில் வெளியாகி அனைவரையும் கதறி அழ வைத்துள்ளது.
நடிகர் புனித் ராஜ்குமார் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
அவர் ஏற்கனவே கண்களை தானம் செய்திருந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் கண் மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பேசி, உடனே வந்து புனித் ராஜ்குமாரின் உடலில் உள்ள கண்களை தானம் செய்வதாக கூறினர்.

இதையடுத்து டாக்டர் புஜரங்கி தலைமையிலான குழுவினர் விக்ரம் மருத்துவமனைக்கு வந்து, புனித் ராஜ்குமாரின் கண்களை எடுத்து சென்றுள்ளனர். இதனை கேட்டு அவரின் ரசிகர்கள் கதறி அழுதுள்ளனர்.
இதேவேளை, அவரின் 2 கண்கள், 2 பேருக்கு பொருத்தப்படும் என்றும், 2 நாட்களுக்குள் இந்த பணி மேற்கொள்ளப்படும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதன் மூலம் புனித் ராஜ்குமார் இறந்த பிறகும் 2 பேருக்கு பார்வை கொடுத்துள்ளார்.