ஜிம்மில் நடிகர் புனித்திற்கு என்ன நடந்தது? தாமதமாக மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டாரா? பல உண்மைகள் இதோ
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தது இந்திய திரையுலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இன்று காலை புனித் ராஜ்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.
புனித்தின் தந்தை ராஜ்குமார், அவரது அண்ணன் சிவ ராஜ்குமார் என அனைவரும் பிரபல நடிகராக இருந்து வரும் நிலையில் 46 வயதில் உடம்மை ஆரோக்கியமாக வைத்திருந்த நடிகர் புனித்தின் மரணம் பெரும் அதிர்ச்சியாகவே இருக்கின்றது.
நடனம், உடற்பயிற்சி, சண்டை பயிற்சி என ஆக்வாக இருந்தவருக்கு மாரடைப்பு என்பதை யாராலும் நம்ப முடியவில்லை. இருதினங்களுக்கு முன்பு பஜ்ரங்கி 2 படத்தின் விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
வழக்கம் போல் இன்றும் காலை உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்ற புனித், எடை தூக்கி பயிற்சி மேற்கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்ததாகவும், அங்கேயே இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பின்பு தாமதமாகவே அதாவது 11.40 மணிக்கு மருத்துவமனைக்கு கொண்டு வந்த நிலையில், இவரது நிலைமை மோசமாக இருந்ததாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது சுயநினைவு இல்லாமலும், இதயம் துடிக்காமல் (Cardiac Asystole), இசிஜி மானிட்டரில் "ஃபிளாட் லைன்" இருந்ததாகவும், முதலுதவி அளிக்கப்பட்டதாகவும் மருத்துவமனை கூறியுள்ளது.
பின்னர் Advanced cardiac resuscitation வகையிலான மாரடைப்பிற்கான சிகிச்சைகள் இவருக்கு வழங்கப்பட்டது. ஆனால் தொடர் சிகிச்சைகள் எதுவும் பலன் அளிக்காத நிலையில் இவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.