வைரலாகும் புனித் ராஜ்குமார் போட்ட கடைசி ட்வீட்.: காலையில் போட்ட ட்விட்டை பார்த்து கண்ணீரில் ரசிகர்கள்
கன்னட திரையுலகின் சூப்பர்ஸ்டாராக இருந்த நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக மரணமடைந்த நிலையில், அவர் இறுதியாக போட்ட டுவிட்டை ரசிகர்கள் கண்ணீருடன் வைரலாக்கி வருகின்றனர்.
இன்று காலை புனித் ராஜ்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.
இன்று உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தனது உடம்பினை மிகுந்து ஆரோக்கியமாக வைத்திருந்த புனித், இருதினங்களுக்கு முன்பு பஜ்ரங்கி 2 படத்தின் விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
இதில் தனது தந்தை மற்றும் சகோதரருடன் கலந்து கொண்ட புனித், மிகவும் ஆடி பாடி மகிழ்ச்சியுடன் காணப்பட்டதோடு, இறுதியாக தனது அண்ணனுடன் சேர்ந்து நடனமும் ஆடினார்.
இந்நிலையில் இன்று காலை பஜ்ரங்கி 2 படம் வெளியானதை ஒட்டி, படக்குழுவை வாழ்த்தி புனித் ராஜ்குமார் ட்வீட் போட்டார்.
அந்த ட்வீட்டை ரீ ட்வீட் செய்யும் ரசிகர்கள், அந்த ட்வீட் மீது தங்கள்து இரங்கல்களையும் வேதனையையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
காலையில் ட்வீட் போட்டவர்கள் மதியம் உயிருடன் இல்லை என்பதை ரசிகர்களால் ஜீரணிக்கமுடியவில்லை. அழுது உடைந்து பலரும் ட்வீட் பதிவிட்டு வருகிறார்கள்.
ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், புனித்தின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
