சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இளம் நடிகர்: பேரதிர்ச்சியில் திரையுலகினர்
பிரபல கன்னட நடிகரான புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமுதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் கடைசி மகன் புனித் ராஜ்குமார், “பெட்டாடா ஹூவு” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான புனித் ராஜ்குமாருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது கிடைத்தது.
தொடர்ந்து அப்பு என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமான புனித் ராஜ்குமாருக்கு, ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உருவானது.
இந்நிலையில், இன்று காலை ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, புனித் ராஜ்குமாருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புனித்துக்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விரைவில் குணமடைந்து வீட்டுக்கு திரும்ப ரசிகர்களும், பிரபலங்களும் பிரார்த்தனை செய்து வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது ஒட்டுமொத்த திரையுலகையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.