நீரிழிவு நோயாளிகள் தேன் சாப்பிடலாமா? குழப்பத்திற்கு பதில் இதோ
இன்று பெரும்பாலான நபர்கள் சந்திக்கும் நீரிழிவு நோயினால் பல உணவுப்பொருட்களை சாப்பிடலாமா என்ற சந்தேகமே அதிகமாக உள்ளது. அதிலும் நீரிழிவு நோயாளிகள் தேன் சாப்பிடலாமா என்பது பலரின் கேள்வியாக இருந்து வருகின்றது.
பாலில் தேன் கலந்து சாப்பிடுதல், தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் இவற்றினை சாப்பிடலாமா என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
நீரிழிவு நோயாளிகள் தேன் சாப்பிடலாமா?
நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் அறிவுரையின் படியே உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் உணவுகளில் அதிக கட்டுப்பாடும் அவசியம்.
குறிப்பாக வெள்ளை சர்க்கரையை நீரிழிவு நோயாளிகள் மட்டுமின்றி, சாதாரண நபர்களும் சாப்பிடுவதை தவிர்க்கவும். மேலும் நீரிழிவு நோயாளிகளின் உடல்கள் ஒவ்வொருவருக்கும் மாறுபடுமாம்.
மருத்துவ குணங்களை அள்ளித்தரும் தேனை நீரிழிவு நோயாளிகள் எடுத்துக்கொள்வதற்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பதில்லை. இதற்கு காரணம் ஒரு தேக்கரண்டு தேனில் 4 கிராம் கார்போ ஹைட்ரேட் இருப்பதே ஆகும். ஆதலால் இதனை நீரிழிவு நோயாளிகள் எடுத்துக்கொள்வது நல்லதல்ல என்று கூறப்படுகின்றது.
இதே போன்று தான் தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் நீரிழிவு நோயாளிகளுக்கும், ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் உகந்தது அல்ல என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நாம் உண்ணும் தேனில் பொட்டாசியம் இல்லை. அதனால் எந்த வகையிலும் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவாது என்பதால் தவிர்ப்பதே நலம்.