அடுப்பே பற்றவைக்காமல் நாவூரும் சுவையில் புளி மிளகாய் சட்னி... எப்படி செய்வது?
பொதுவாகவே பெரும்பாலான வீடுகளில் காலை உணவுக்கு இட்லி, தோசை செய்வது வழக்கம். அதற்கு தொட்டக்கொள்ள வழக்கமாக சட்னி செய்கின்றீர்களா?
அப்போ தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என்று அதையே திரும்பவும் செய்யாமல், சற்று வித்தியாசமாக ஒருமுறை இந்த புளி மிளகாய் சட்னியை செய்து பாருங்கள்.
வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் நாவூரும் சுவையில் எவ்வாறு புளி மிளகாய் சட்னி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.

chanakya niti: இந்த விடயங்கள் சரியாக இருந்தால் திருமண வாழ்வில் பிரிவே இருக்காது... என்னென்ன தெரியுமா?
தேவையான பொருட்கள்
வரமிளகாய் - 10
உப்பு - சுவைக்கேற்ப
புளி - சிறிய எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் - 15
தண்ணீர் - சிறிதளவு
நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
செய்முறை
முதலில் வரமிளகாயை ஒரு மிக்சர் ஜாரில் போட்டு சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து சிறிய எலுமிச்சை அளவு புளி, 15 சின்ன வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து, சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
இறுதியாக அதில் நல்லெண்ணெய் ஊற்றினால் அவ்வளவு தான் சுவையான புளி மிளகாய் சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |