இவர் தான் எனக்கு எல்லாமே!.. உருக்கமாக பதிவிட்ட குக் வித் கோமாளி புகழ்!! யாருன்னு பாருங்க?
கிராமத்தின் பட்டி தொட்டி முதல் உலகெங்கும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான், இந்த நிகழ்ச்சியை பார்த்து ரசிக்காதவர்களே இல்லை என்று அடித்துக் கூறலாம், அந்த அளவுக்கு பலருக்கும் சந்தோஷத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது. போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது.
அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் குறிப்பாக புகழுக்கு ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது எனலாம். தற்போது சினிமாவிலிலும் என்ட்ரி கொடுத்து படுபிஸியாகிவிட்டார் புகழ், இருப்பினும் இந்த இடத்தை அவர் அவ்வளவு எளிதில் அடைந்துவிடவில்லை.
கார் க்ளீனராக வேலை பார்த்து வந்த புகழ் தற்போது கார் ஓனராகி இருப்பதை அவரது ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்ட போது அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது அவரது அண்ணன் தான்.
சென்னையில் இருவரும் வேலை செய்தபோது பல கஷ்டங்களை அனுபவித்து தான், இன்று நல்ல நிலைமைக்கு வந்துள்ளனர் என்று புகழ் அடிக்கடி பேட்டிகளில் கூறுவதுண்டு. இந்நிலையில் பலரும் அவரது அண்ணனை பார்த்ததில்லை. அவரது திருமணத்தின்போது புகழ் வெளியிட்ட புகைப்படம் இதோ..!