அப்பாவான குக் வித் கோமாளி புகழ்... மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு: குவியும் வாழ்த்துக்கள்
குக் வித் கோமளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் தந்தையான மகிழ்ச்சியில் வெளியிட்ட புகைப்படத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.
குக் வித் கோமாளி புகழ்
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் புகழ். இவரின் நகைச்சுவைக்கு என்று தனி ரசிகர்கள் இருந்தாலும், இவரின் சுருட்டையான தலைமுடிக்கும், காமெடியான பேச்சுக்கும் பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள்.
தொலைக்காட்சிகளில் மட்டும் தன் நடிப்பைக் காட்டி வந்தவர் தற்போது சினிமாவில் இறங்கி அஜித் குமார் நடித்த வலிமை, சிவக்குமார் நடித்த அயோத்தி, சிவகார்த்திகேயனின் டான் போன்ற திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
சில படங்களில் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த புகழ் தற்போது கதாநாயகனாகவும் அறிமுகமாகியிருக்கிறார்.
புகழின் மகாராணி
இவர் கடந்த செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதி தனது காதலியைான பென்ஸியை திருமணம் செய்துக் கொண்டார். இந்த வருட திருமண நாளில் தன் மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அவர்களுக்கு நேற்று பெண் குழந்தை பிறந்திருக்கிறார். இந்த மகிழ்ச்சியான தகவலை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |