பண்றதெல்லாம் பண்ணிட்டு மன்னிப்பு கேட்ட புகழ்
விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு மூலமாக அறிமுகமானவர் புகழ். அதன்பின்பு குக் வித் கோமாளி என்ற ரியாலிட்டி ஷோ மூலம் பட்டிதொட்டி எங்கும் புகழின் புகழ் பரவ, அனைவருக்கும் பிடித்தமான ஒரு காமெடியனானார்.
புகழ் இல்லாவிட்டால் குக் வித் கோமாளி பார்க்க மாட்டேன் என்று கூறுமளவுக்கு அவர் ரசிகர் கூட்டத்தை சம்பாதித்து வைத்துள்ளார்.
இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒவ்வொரு கோமாளிகளும் ஒவ்வொரு வாரத்துக்கும் புதுப் புது கெட்டப்களில் வரவேண்டும்.
அந்த வகையில் கடந்தவாரம் அவர் கில்லி விஜய் கெட்டப் போட்டிருந்தார். இந்நிலையில் அவரது குக் சிருஷ்டியும் செஃப் வெங்கடேஷ் பட்டும் புகழை புரட்டி எடுத்துவிட்டனர்.
இந்நிலையில் புகழ் தளபதி ரசிகர்களிடம் 'அனைத்து தளபதி ரசிகர்கள் சார்பாக மன்னிப்பு கேட்கிறேன்...யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.
அனைத்தும் கற்பனையே' என புகழ் குறிப்பிட்டிருந்தார். 'பண்றது எல்லாம் பண்ணிட்டு இப்படி ஒன்னு சொல்லிடு' என நடிகர் மகேந்திரன் அவரை கலாய்த்துள்ளார்.