அசிங்கப்படுத்தப்படும் தேவயானி கதறியழுத சோகம்: ரசிகர்களை கொந்தளிக்க வைத்த காட்சி
நடிகை தேவயானி தற்போது புது புது அர்த்தங்கள் சீரியலில் நடித்து வரும் நிலையில் தற்போதைய புதிய ப்ரொமோ காட்சி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நடிகை தேவயானி
பிரபல நடிகையான தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து கடந்த 2001ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
நீண்ட இடைவேளைக்கு பின்பு தற்போது சீரியலில் தனது நடிப்பினை தொடர்ந்து வருகின்றார். இவரது எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகின்றது.
சீரியலில் கதறிய தேவயானி
குறித்த சீரியலில் மிகவும் சாதுவாக நடித்து வரும் இவர், தனது மருமகளுக்கு மிகச்சிறந்த தாயாக இருந்து வருகின்றார். தற்போது புதிய கதை களத்துடன் காணப்பட்ட இந்த சீரியலில் ரேடியோவில் வேலை கிடைத்துள்ளது.
ஆனால் இவரை வேலையில் வைப்பதற்கு அலுவலகம் மேலாளருக்கு பிடிக்காததால் வெளியேற்றுவதற்கு பல சதி வேளைகளை செய்து வருகின்றார்.
அதில் இன்றைய காட்சி ரசிகர்களை மிகவும் கலங்க வைத்துள்ளது. நேரலையில் நிகழ்ச்சி ஒன்றினை நடத்த கோரியுள்ளனர். இதில் லட்சுமியாக நடித்து வரும் தேவயானி தன்னால் முடியாமல் கதறி அழுதுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.