தேவயானியின் 2ஆவது திருமணத்தில் காத்திருக்கும் Twist! உடைந்து விழுந்த மருமகள் - பரபரப்பு ப்ரோமோ
புது புது அர்த்தங்கள் சீரியலில் ஹரி-லட்சுமி திருமணம் குறித்த புதிய அப்டேட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.
புது புது அர்த்தங்கள் சீரியலில் லட்சுமியாக நடிக்கும் தேவயானியின் 2ஆவது திருமணம் நிற்க போவதாக கூறப்படுகின்றது.
லக்ஷ்மி அம்மாவாக பவித்ராவுக்கு மாமியாராக புது புது அர்த்தங்கள் சீரியலில் தேவயானி நடிப்பில் பட்டையைக் கிளப்பிக் கொண்டு வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் தேவயானி நடிப்பில் தற்போது இந்த சீரியல் டாப் ரேடிங்கில் சென்று இருக்கிறது.

சீரியலில் ஆதிராவின் குழந்தைக்கு சந்தோஷ் தான் அப்பா என்ற உண்மை பிரதீபாவிற்கு தெரிய வருகிறது.
இதை பிரதீபா, பவித்ராவிடம் சொல்லி விடுகிறார். இதனால் வீட்டில் பூகம்பம் நடக்கிறது. அதன் பிறகு சந்தோஷிற்கு டி.என்.ஏ டெஸ்ட் எடுக்கிறார்கள். பின் குழந்தைக்கு அப்பா சந்தோஷ் தான் என்ற உண்மை அனைவருக்குமே தெரிந்து அதிர்ச்சடைகிறார்கள்.