மாதக்கணக்கில் கெட்டுப்போகாமல் இருக்கும் புதினா பொடி: வீடுகளில் செய்து பத்திரப்படுத்தி வைக்கலாம்
பொதுவாகவே நாம் கடைகளில் வாங்கும் சில பொருட்களை வீடுகளிலேயே செய்து சுவைக்கலாம்.
ஆனால் அப்படி கடைகளில் வாங்கும் பொருட்களில் இருக்கும் சுவையை வீடுகளில் செய்யும் போது இருப்பதில்லை. அப்படி நீங்கள் விருப்பபட்டு சுவைக்கு அடிமையாகி தினமும் சாப்பிடும் சில பொருட்களான ஊறுகா, இட்லி பொடி என்பன உங்கள் கைகளால் வீடுகளிலேயே செய்யலாம்.
அந்தவகையில் புதினா பொடியை வீட்டிலேயே எவ்வாறு செய்வது என்று இன்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
புதினா இலை - 1 கப்
தேங்காய் துருவல் - 1/4 கப்
உளுத்தம்பருப்பு - 1/4 கப்
உளுந்து - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 10
உப்பு - தேவையான அளவு
புளி - சிறியது
ஆமணக்கு எண்ணெய் - 3 தேக்கரண்டி
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சுத்தம் செய்த புதினா இலைகளை வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் உளுத்தம் பருப்பு மற்றும் உளுந்தை தனியாக வதக்கிக்கொள்ளவும்.
அதன் பின் துருவிய காய்ந்த தேங்காய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
தற்போது ஒரு பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து காய்ந்த மிளகாயை வதக்கிக் கொள்ளவும்.
பின்னர் புளி சேர்த்து எல்லாவற்றையும் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக் கொண்டால் ஆரோக்கியமான புதினா பொடி தயார்.
இதனை அரைத்து எடுத்துக் கொண்ட பின் காற்று புகாத ஒரு கொள்கலனில் போட்டு ஒரு ஆண்டுக்குப் பயன்படுத்தலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |
