என்னுடைய பாத்ரூமில் லாக் வைக்கவில்லை! ஸ்ரீதேவியின் மகள் வெளியிட்ட வீடியோ
பிரபல நடிகை ஸ்ரீதேவியின் சென்னை வீடு தொடர்பில் அவருடைய மகள் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
கனவு நாயகி ஸ்ரீதேவி
80களில் முதன்மை நடிகையாக விளங்கிய ஸ்ரீதேவி, தமிழகத்தை சேர்ந்தவர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வந்தார்.
1996ம் ஆண்டு இந்திய திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஜான்வி மற்றும் குஷி கபூர் என இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
அம்மாவுடன் இருந்த நினைவுகள்
சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள ஜான்வி கபூர், சவாலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஸ்ரீதேவியின் சென்னை வீட்டை சுற்றிக்காட்டியுள்ளார் ஜான்வி.
இந்த வீடியோவில் பேசியுள்ள ஜான்வி, இந்த வீட்டிற்குள் பொருட்கள் எல்லாம் அம்மா பார்த்து பார்த்து வாங்கி வைத்துள்ளார்.
வீட்டை தன்னுடைய ஓவியங்கள் என் அம்மா அலங்கரித்துள்ளார், அம்மாவின் இறப்பிற்கு பிற்கு நாங்கள் இங்கு வருவது அரிது.
ஆனால் என்னுடைய தந்தை இந்த வீட்டை மீண்டும் ரிடெக்கரேட் செய்து எனக்கும் தங்கைக்கும் சர்பிரைஸ் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வீட்டினுள் செல்லும் போது ஸ்ரீதேவியின் புகைப்படங்கள் மற்றும் அவரின் விருதுகள் தொடர்பாக விளக்கமாகவும் கூறியுள்ளார்.
பாத்ரூம்களுக்கு லாக் வைக்கவில்லையாம்
பின்னர் ஸ்ரீதேவி மிகவும் கண்டிப்பானவர் என்றும், இதனால் அம்மா பாத்ரூம்களிலிருக்கும் லாக்குகளை கழட்டி வைத்துள்ளார்.
ஜான்வி கதவை சாத்திவிட்டு ஆண் நண்பர்களுடன் உரையாடுவார் என்பதால் அவருடைய ரும்களில் பாத்ரூம் லாக் இல்லவே இல்லையாம், இது தான் சிறிய வருத்தம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் ஸ்ரீதேவியின் செயலுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.