பப்ஜி மதன் விடுதலை... உடல் மெலிந்த படி சிறையிலிருந்து வந்ததும் செய்த முதல் வேலை என்ன தெரியுமா?
ஆன்லைன் விளையாட்டு தளமான பப்ஜி விளையாட்டில் ஆபாசமாக பேசிக்கொண்டதால் மதன் என்பவர் கடந்த (2021) ஆண்டு ஜூன் 18 ஆம் தேதி மதனை தர்மபுரியில் கைது செய்தனர்.
அதன்பின்னர், பின்னர் சைபர் சட்ட குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, குண்டர் சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பப்ஜி மதன் கடந்த ஏப்ரல் மாதம் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் விளையாட்டில் கலந்துகொள்ள அறிவுறுத்தி உள்ளதாகவும், குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.
பண மோசடி செய்த தொகையில் ஒரு கோடியே 7 லட்சம் ரூபாயும், 2 கார்களையும் காவல்துறை பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. விருப்பப்பட்டு விளையாட்டில் சேர்ந்தவர்களிடம் மட்டுமே விளையாட்டின் மூலம் உரையாடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், மாநிலத்தில் என்னால் எந்த சட்ட ஒழுங்கு பிரச்னையும் ஏற்படவில்லை. அரசால் தடை செய்யப்பட்ட செயலியை நான் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ள பப்ஜி மதன் தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி உரிய காலத்தில் காவல்துறை பரிசீலிக்கவில்லை என்பதை ஏற்று பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
தொடர்ந்து, பப்ஜி மதன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ததன் மூலம், அவர் மீதான மற்ற வழக்குகளிலும் பப்ஜி மதன் ஜாமீன் பெற்று வெளியே வர வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது வெளியே வந்துள்ளார்.
ஜாமீனில் வெளியே வந்த அவர் நடந்து வரும் வீடியோ காட்சியும், மீசையை முறுக்கிய படி ஸ்டைலான வீடியோவை வெளிவந்துள்ளது. சமூக வலைத்தளங்களிலும் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
