பப்ஜி விளையாட்டால் பைத்திய நிலைக்கு சென்ற சிறுவன் - வெளியான பரிதாப வீடியோ!
ஆன்லைன் தடைசெய்யப்பட்ட விளையாட்டான சீனாவின் பப்ஜி விளையாட்டால் பல இளைஞர்கள் பாதிக்கப்பட்டும், பல குற்ற சம்பவங்கள் நடைப்பெற்றத்தையும் கண்டிருப்போம்.
என்னதான் இதுபோன்ற சீன விளையாட்டுகளை இந்திய அரசு தடை செய்தாலும், வேறு வேறு பெயர்களில் அவர்கள் இந்த கேமை வெளியிட்டு கொண்டு தான் இருக்கின்றனர்.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் பப்ஜி விளையாட்டால் பாதிக்கப்பட்டுள்ளான்.
கோடைக்காலத்தில் வெண்டைக்காய் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
அரசு மருத்துவமனைக்கு அவனை அழைத்து சென்ற பெற்றோர்கள் அரை மயக்கத்தில் துப்பாக்கி சுடுவது உட்பட பப்ஜி விளையாட்டை விளையாடும்போது செய்யும் பாவனையையே செய்துகொண்டிருந்துள்ளான்.
தொடர்ந்து பப்ஜி விளையாட்டை விளையாடி கொண்டிருந்ததால், ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாரான்.
இதைக்கண்ட பெற்றோர்கள் வேதனையில் கதறினாலும், சிறுவனை மருத்துவமனையில் இருந்து எந்தவித தகவல் அளிக்காமல் கூட்டிச்சென்றுள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பிட்ட வீடியோ காட்சியை இங்கே அழுத்தி காணலாம்...