கட்டிப்பிடி வைத்தியம் பற்றி தெரியுமா? உளவியல் கூறும் உண்மைகள்
அணைப்பு (HUG) என்பது பாசத்தை வெளிப்பாடாக பார்க்கப்படுகின்றது.
இது உலகம் முழுவதும் உள்ள எல்லா கலாசாரங்களிலும் இடம்பெறுகின்றது. மனிதர்கள் மனம் செழிக்க அரவணைப்புகள் அவசியம் என பலரும் கூறுவார்கள்.
அணைப்பு என்பது பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவைப்படும் ஒன்றாக உள்ளது. சிறந்த உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் இந்த அணைப்பு மேம்படுத்துகின்றது என கூறப்படுகின்றது.
இது தொடர்பில் சமீபத்தில் கல்லூரி மாணவியொருவர் பேசுகையில், “ தன்னுடைய தந்தை சிறுவயதில் என் தோலில் கைப்போட்டு பேசுவார். அதனை பெரியவராக வளர்ந்த பின்னரும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என கூறியுள்ளார். பிள்ளை பருவத்தில் தந்தை தாயின் அணைப்பு மற்றும் அரவணைப்பு குழந்தைகளுக்கு அவசியமானது.
“கட்டிப்பிடித்தல்” என்பது எப்படியான பிரச்சினைகளையும் சரிச்செய்யும் சக்தி வாய்ந்த செயலாக பார்க்கப்படுகின்றது. இது எண்ணற்ற, உடல் உணர்ச்சி மற்றும் உளவியல் நன்மைகளைக் கொண்டிருக்கிறது.
அதே போன்று நம்மை உறவினர்கள் அல்லது நண்பர்கள் கட்டிப்பிடிக்கும் பொழுது உறவு முறை அல்லது நட்பு ஆழமாக பலப்படுத்தப்படுகின்றது, அக்கறை, அன்பு, பாராட்டு ஆகியன அதிகரிக்கின்றது.
அந்த வகையில், இப்படி பல வழிகளில் நமக்கு உதவிச் செய்யும் அணைப்பு பற்றி மேலதிக தகவல்களை தொடர்ந்து பதிவில் பாரிக்கலாம்.
அணைப்பினால் கிடைக்கும் பலன்கள்
1. அணைப்பு நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கும் வேலையை செய்கிறது. மன நிலையில் மாற்றம் இருப்பவர்களுக்கு அணைப்புக்கு அவசியம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
2. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் இந்த அணைப்பு மேம்படுத்துகின்றது.
3. கட்டிப்பிடிக்கும்போது ஆக்சிடாசின் வெளியீடு இயற்கையான வலி நிவாரணியாகவும் அணைப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
4. சிறிய உடல் வலிகள் மற்றும் அசௌகரியங்களை தணிப்பதற்காக கூட நாம் அணைக்கலாம்.
5. குழந்தைகளுக்கு உடல்நலம் சரியில்லாத போது அவர்களை அணைத்து ஆறுதல் படுத்துவது அவசியம். இது அவர்களை நோயிலிருந்து வெளியில் கொண்டு வரும். அதிலும் குறிப்பாக வளர்ந்த பிள்ளைகளுக்கு அணைப்பு என்பது அவசியமானதொன்றாகும்.
6. காதலர்கள் மற்றும் தம்பதியர்களுக்கும் கட்டிப்பிடி வைத்தியம் மிகவும் அவசியம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது அவர்களுக்கு இடையில் இருக்கும் காதல் ஹார்மோனை அதிகரிக்கிறது. அத்துடன் அவர்களின் மனநிலையும் மேம்படுகின்றது.
7. மகிழ்ச்சியின் உணர்வுகளை அதிகரிக்க அணைப்பு உதவுகின்றது. இது மனச்சோர்வை எதிர்த்துப் போராடுகிறது.
8. கட்டிப்பிடிப்பது போன்ற உடல் ரீதியான தொடுதல் தனிமை உணர்வை எதிர்த்து போராடுகின்றது.
9. நேர்மறையான கண்ணோட்டத்தில் அன்பையும் ஆதரவையும் அணைப்பு வெளிபடுத்துகின்றது. இது சுய மதிப்பையும், நம்பிக்கையையும் அதிகரிக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |